சுபாசினி மிசுதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்மசிறீ விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுபாசினி மிசுதிரிக்கு புது தில்லியில் (2018) வழங்கும் காட்சி

சுபாசினி மிசுதிரி (Subhasini Mistry-பிறப்பு 1943) என்பவர் ஓர் இந்தியச் சமூக சேவகர். இவர் 23 வயதில் நான்கு குழந்தைகளுடன் விதவையானார். வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தும், காய்கறிகள் விற்றும், கூலித் தொழிலாளியாக வேலை செய்தும் வாழ்க்கையில் சிரமப்பட்டார். இவர் ஏழைகளுக்காக "மனிதநேய மருத்துவமனை" என்ற தொண்டு மருத்துவமனையைக் கட்டினார். 2018ஆம் ஆண்டில், இவரது சமூகப் பணியைப் பாராட்டி, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[1][2][3][4][5] 2017-இல் இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது பெற்ற 12 பேரில் இவரும் ஒருவர்.

இளமையும் பணிகளும்[தொகு]

சுபாசினி மிசுதிரி 1943-இல் கொல்கத்தாவில் உள்ள குல்வா கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு 12 வயதில் திருமணம் நடந்தது. காய்கறி வியாபாரியான இவரது கணவர், 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பொதுவான நோய்க்கு மருத்துவ உதவி பெற முடியாமல் இறந்தார். சுபாசினி மிசுதிரி நான்கு குழந்தைகளை வளர்க்கச் சிரமப் பட்டார். இவரது மரணத்திற்குப் பிறகு, மிசுதிரி தனது கணவர் மருத்துவ வசதி இல்லாததால் எதிர்கொண்ட சிரமங்களை வேறு யாரும் சந்திக்க விடக்கூடாது என்று முடிவு செய்தார். கல்வியறிவு இல்லாத இளம் விதவை, 20 வருடங்கள் கைத்தொழிலாளராகவும், காய்கறி வியாபாரியாகவும், வீட்டு வேலை செய்தும், மாதம் 100 ரூபாய்க்கும் சற்று அதிகமாகச் சம்பாதித்தார். இவள் தன் மகன் அஜய்யின் கல்விக்காகக் கொஞ்சம் பணத்தைச் செலவழித்தார். கடைசியாக அஜய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவ மருத்துவரானார். 1992ஆம் ஆண்டில், பல வருடங்கள் பணத்தைச் சேமித்த பிறகு, இவர் தனது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி அன்சுபுகூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதில் ஒரு மருத்துவக் கூடத்தினை திறந்தார், இதில் இவரது மகன் மருத்துவராகச் சேர்ந்தார்.[6] 1993ஆம் ஆண்டில், இந்த மருத்துவமனை 250 பேருக்குத் தன்னார்வ மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்து 1995-இல் மருத்துவமனையாக விரிவடைந்தது. இன்று, மனிதாபிமான மருத்துவமனை மூன்று ஏக்கர் பரப்பளவில் 45 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரிவடைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிறந்த மருத்துவ உபகரணங்களையும் கொண்டுள்ளது. இவர் தற்போது இரண்டு மருத்துவமனைகளை நடத்துகின்றார். இதில் ஒன்று இவரது கிராமமான (திருமணம் செய்து கொண்ட கிராமம்; அதாவது இவரது கணவரின் சொந்த கிராமம்) அன்சுகாலி (நதியா மாவட்டம்) மற்றொன்று சுந்தரவனத்திலும் உள்ளது.[7]

விருதுகள்[தொகு]

பல்வேறு நிலைகளில் தனது சமூகத்திற்குச் சேவையாற்றுவதற்கான இவரது அர்ப்பணிப்புக்காக, 2009ஆம் ஆண்டில் மைண்ட்-ஆப்-ஸ்டீல் பிரிவில் மதிப்புமிக்க காட்ப்ரே பிலிப்சு தேசிய வீரதீர விருதை வென்றார். 2018ஆம் ஆண்டில் நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government announces recipients of 2018 Padma awards". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
  2. "Meet Padma Shri Awardee Suhasini Mistry, Who Built a Charitable Hospital Out of Nothing". Sujit Nath. New18.com. 26 January 2018. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
  3. "She worked as brick-layer and maid to build hospital for the poor". NDTV. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
  4. "Subhashini Mistry". Unsung. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
  5. "Women's Day special: 70-year-old vegetable seller builds hospital for the poor". இந்தியா டுடே. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2018.
  6. Shamayita Chakraborty (Jun 20, 2020). "Kolkata doctor turns boat into chamber for Amphan and corona affected | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.
  7. "No one should die because they are poor: Subhasini Mistry - Times of India" (in en). The Times of India. 28 January 2018. https://www.timesofindia.com/city/kolkata/no-one-should-die-because-they-are-poor-subhasini-mistry/amp_articleshow/62678189.cms. 
  8. "Won't let anyone die untreated, says Padma Shri Subhasini Mistry, founder of Bengal's Humanity Hospital". The New Indian Express. 3 February 2018 இம் மூலத்தில் இருந்து February 8, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180208233326/http://www.newindianexpress.com/thesundaystandard/2018/feb/03/wont-let-anyone-die-untreated-says-padma-shri-subhasini-mistry-founder-of-bengals-humanity-hospi-1767905.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாசினி_மிசுதிரி&oldid=3920517" இலிருந்து மீள்விக்கப்பட்டது