இந்தியாவை மாற்றும் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவை மாற்றும் பெண்கள் விருது (Women Transforming India) என்ற போட்டி இந்திய அரசின் இணையதளமான எனது அரசு, இந்தியாவை மாற்றும் தேசிய நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் ஆதரவோடு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது. உயர்பதவியை மறுக்கும் கட்டமைப்பை உடைத்து, ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும் விதிவிலக்கான பெண் தொழில்முனைவோரை இவர்கள் மதிக்கிறார்கள். [1]

முதலாவது விருதுகள் 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. மூன்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 10 பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியல் எனது அரசு இணையதளத்தில் பொது வாக்கெடுப்புக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. [2] ஆனால் உண்மையில் கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்களில் 25 பெயர்கள் கொண்ட ஒரு குறுகிய பட்டியல் எனது அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொது வாக்கெடுப்பில் 12 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆறு நபர்கள் முதல் பரிசுக்கு உரியவர்களாகவும் ஆறு நபர்கள் இரண்டாம் பரிசுக்கு உரியவர்களாகவும் பிரிக்கப்பட்டனர். [3][4]

2017 ஆம் ஆண்டில் சுமார் 3,000 நுழைவுதாரர்களிடமிருந்து 12 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். [5] 2018 ஆம் ஆண்டில் 2,500 க்கும் மேற்பட்ட உள்ளீடுகளில் இருந்து 15 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். [1]

மேற்கோள்கள்[தொகு]