சுபம் ரதி
சுபம் ரதி Shubham rathi | |
---|---|
பிறப்பு | 10 ஏப்ரல் 1992 மொராதாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்து கல்லூரி, தில்லி |
அமைப்பு(கள்) | ஜாட் மகாசபா உத்தரப்பிரதேச மாணவர் சங்கம். |
அரசியல் இயக்கம் | இந்திய விவசாயிகள் போராட்டம், 2020-2021[1] |
சுபம் ரதி (Shubham rathi) ஓர் இந்திய சமூக ஆர்வலர் ஆவார். இந்தியாவில் அநீதியை எதிர்கொள்ளும் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். [2] உத்தரபிரதேச மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், உத்தரபிரதேசத்தில் இயங்கும் ஜாட் மகாசபாவின் இளைஞர் அணி தலைவராகவும் உள்ளார். சுபம் ரதி தில்லி இந்து கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சுபம் ரதி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜகாங்கிபூர் கிராமத்தில் குல்வீர் சிங் ரதியின் மகனாகப் பிறந்தார். தில்லியில் உள்ள இந்து கல்லூரியில் பட்டம் பெற்றார். [3]
செயற்பாடு
[தொகு]2020 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8 ஆம் தேதியன்று அகில இந்திய ஜாட் மகாசபாவின் இளைய மாணவர் பிரிவின் தலைவராகவும், 19 நவம்பர் 2021 அன்று அகில இந்திய ஜாட் மகாசபாவின் இளைய மாணவர் பிரிவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாணவர் சங்கம் 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உத்தரபிரதேசம் முழுவதும் சுபம் ரதியின் கீழ் உத்தரபிரதேச மாணவர் சங்கம் போராட்டம் நடத்துகிறது. [4] இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி இயக்குநர் ஏக்தா கபூர் எடுத்த ஓர் இணையத் தொடர் மீது சுபம் ரதி புகார் அளித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "उत्तर प्रदेश स्टूडेंट यूनियन के प्रदेश अध्यक्ष शुभम राठी अपनी टीम के साथ ठाकुरद्वारा में कृषि सुधार कानूनों के विरोध में हुई महापंचायत से लौट रहे थे।" (in hi). தைனிக் ஜாக்ரண் இம் மூலத்தில் இருந்து 17 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220425182459/https://m.jagran.com/lite/uttar-pradesh/moradabad-city-kantar-jammed-sloganeering-in-protest-against-attack-on-rakesh-tikait-21521121.html.
- ↑ "Shubham Rathi, state president of the UP Students' Union, was among those who made urgent calls at night to mobilise students. "After the January 26 event, we had gone into depression, but we were determined to continue even then. Some people had started packing up though. But after Baba (Tikait) broke down". Indian Express Limited (in ஆங்கிலம்). 30 January 2021. Archived from the original on 30 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "महासभा के युवा प्रदेश अध्यक्ष शुभम राठी ने जनपद शामली से विक्रांत बालियान, मुजफ्फरनगर से विपिन लाठियान और सहारनपुर से अरविंद चौधरी को जिलाध्यक्ष पद पर नियुक्त किए जाने की घोषणा की।" (in hi). Amar Ujala. https://www.amarujala.com/uttar-pradesh/shamli/jat-mahasabha-expanded-the-organization-shamli-news-mrt5757046192.
- ↑ "behind holding protest regarding newly-introduced Agnipath scheme, Shubham Rathi, the State President of Uttar Pradesh Students Union". Outlook (Indian magazine) (in ஆங்கிலம்). 28 June 2022. Archived from the original on 28 June 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help)