சுனிதா சிங் சவுகான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனிதா சிங் சவுகான்
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2015–2020
2010–2015
தொகுதிபெல்சந்து சட்டப்பேரவை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்

சுனிதா சிங் சவுகான் (Sunita Singh Chauhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். [1] பீகார் மாநிலத்திலுள்ள சீதாமரி மாவட்டத்தின் பெல்சந்த் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] பீகார் மாநில அரசியலில் ஐக்கிய சனதா தளம் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சுனிதா சிங் சவுகான் 2000 ஆம் ஆண்டு அரசியலில் சேர்ந்தார். 2005 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக அறிமுகமானார் ஆனால் தொங்கு சட்டசபை காரணமாக அதே ஆண்டில் மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்தலில், இவர் மீண்டும் தனது தேர்தலில் வெற்றி பெற்று 2010 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் பெல்சந்த்து சட்டப்பேரவை தொகுதியில் ஐக்கிய சனதா தளம் கட்சியின் வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். தனது நெருங்கிய போட்டியாளரான லோக் சனசக்தி கட்சியின் எம்.டி. நசீர் அகமதுவை தோற்கடித்து வெற்றி பெற்றார். [1] தன் கணவரை தலைமையிடத்துக்குள் அழைத்துச் சென்று சட்டமன்ற உறுப்பினராக ஆதாயம் பெற்றதற்காக சுனிதா சிங் சவுகான் விமர்சிக்கப்படுகிறார்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Profile" (PDF). 22 Nov 2018. Archived from the original (PDF) on 2019-06-12. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  2. "Husband does talking for Dal MLA". 2015-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_சிங்_சவுகான்&oldid=3874632" இலிருந்து மீள்விக்கப்பட்டது