சுங்கம் அச்சலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கம் அச்சலு, 1952

சுங்கம் அச்சலு (Sunkam Achalu)(3 மார்ச் 1924 - 9 ஆகத்து 1983) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மக்களவையின் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை) உறுப்பினராக 1952 முதல் 1957 வரை ஆந்திராவின் நல்கொண்டா மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இளமை[தொகு]

கசய்யாவின் மகனான சுங்கம் அச்சலு 3 மார்ச் 1924 அன்று நல்கொண்டாவில் பிறந்தார்.[1] முறையான கல்வியைப் பெறாதா இவர், விவசாயியாக வேலை செய்தார்.[1] வீட்டில் உருதும் தெலுங்கும் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். இதனுடன் அடிப்படை ஆங்கிலத் திறன்களைப் பெற்றார்.[2] 1946ஆம் ஆண்டு லிகாம்மாவை மணந்தார்.[1] நல்கொண்டா நகரில் உள்ள பட்டுகுடாவில் வசித்து வந்தார்.[3]

சமூக பணி மற்றும் அரசியல் போராட்டங்கள்[தொகு]

சுங்கம் அச்சலு பட்டியல் சாதியினரின் முன்னேற்றத்திற்கான நீண்ட போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பணியாளரானார். பின்னர் அச்சலு காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி, பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு தலைவராக ஆனார்.[2] 1948 மற்றும் 1950க்கு இடையில் இவர் இந்தியக் குடியரசுக் கட்சியின் நல்கொண்டா மாவட்ட கிளையின் தலைவராக பணியாற்றினார். ஐதராபாத் பட்டியலிடப்பட்ட சாதிகள் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.[1]

1952 தேர்தல்[தொகு]

இருப்பினும், 1952 இந்திய பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, மக்களவைக்குப் போட்டியிட இவருக்கு இந்தியக் குடியரசுக் கட்சியின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. நல்கொண்டா மக்களவைத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் மக்கள் சனநாயக முன்னணியின் வேட்பாளராக இவர் போட்டியிட்டார்.[1][4] இவர் ரவி நாராயண ரெட்டியின் துணையாக இருந்தார்.[2] சுங்கம் அச்சலு, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[1][4] இவர் 282,117 வாக்குகளைப் பெற்றார்.[5] இவரது இந்தியக் குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர் தனது வைப்புத்தொகையை இழந்தார். 27 வயது, சுங்கம் அச்சலு இந்த நேரத்தில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.[2]

கட்சி உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்களவையில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் சுங்கம் அச்சலு செயல்பட்டார். பட்டியலிடப்பட்ட சாதியினரின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க இவர் கட்சியில் செல்வாக்கு செலுத்த முயன்றார்.[2]

இறப்பு[தொகு]

சுங்கம் அச்சலு 9 ஆகத்து 1983 அன்று நல்கொண்டாவில் இறந்தார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கம்_அச்சலு&oldid=3826026" இலிருந்து மீள்விக்கப்பட்டது