சுக்தேவ் சிங் லிப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்தேவ் சிங் லிப்ரா
Sukhdev Singh Libra
நாடாளுமனற உறுப்பினர்
பதவியில்
2009-2014
பின்னவர்அரிந்தர் சிங் கால்சா
தொகுதிபதேகர் சாகிபு சட்டமன்ற தொகுதி
பதவியில்
2004-2009
தொகுதிஉரோபார் சட்டமன்றத் தொகுதி
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1998-2004
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-11-07)7 நவம்பர் 1932
லூதியானா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு6 செப்டம்பர் 2019(2019-09-06) (அகவை 86)
Khanna, Punjab, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
சிரோமணி அகாலி தளம்
துணைவர்சுர்சித்து கவுர்
பிள்ளைகள்6
வாழிடம்(s)இலிப்ரா, Khanna, பஞ்சாப்

சுக்தேவ் சிங் லிப்ரா, (Sukhdev Singh Libra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுக்தேவ் சிங் லிப்ரா 1932 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7,ஆம் தேதியன்று, பஞ்சாபில் உள்ள கன்னாவில் உள்ள லிப்ரா கிராமத்தில் சர்தார் கர்தார் சிங் மற்றும் சந்த் கவுர் ஆகியோருக்கு ராம்தாசியா சீக்கிய சமர் குடும்பத்தில் பிறந்தார். [1]

கன்னாவிலுள்ள சிறீ குரு கோவிந்த் சிங் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

அரசியல்[தொகு]

  • 2004 ஆம் ஆண்டில் இவர் ரோபார் தொகுதியில் இருந்து 14 ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1985 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராகவும், [2] 1998 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆனார்.
  • 2008 ஆம் ஆண்டில் பதேகர் சாகிபு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [3]

பட்டியல் சாதியினர் நலக் கழகத்தின் (பஞ்சாப்), சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின்உறுப்பினராகவும், மகாராட்டிராவின் குருத்வாரா சாகிப் சச் கந்த் சிறீ அப்சல் நகர் அசூர் சாகிபு நாந்தேட் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [4]

கன்னாவில் உள்ள இவரது பூர்வீக கிராமத்தில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சுக்தேவ் சிங் லிப்ரா காலமானார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Akali Dal plays caste card in Fatehgarh Sahib constituency" (in ஆங்கிலம்). 2014-03-29. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  2. (in en) Punjab 2000: Political and Socio-economic Developments. 2001. https://books.google.com/books?id=1ZNgVkbUtagC&q=sukhdev+singh+libra+mla&pg=PA316. 
  3. Fatehgarh Sahib (Lok Sabha constituency)
  4. "Detailed Profile - Shri Sukhdev Singh Libra - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.
  5. "Congress leader Sukhdev Singh Libra passes away at 87". India Today (in ஆங்கிலம்). September 28, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-06-03.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்தேவ்_சிங்_லிப்ரா&oldid=3816456" இலிருந்து மீள்விக்கப்பட்டது