உள்ளடக்கத்துக்குச் செல்

சுகாஸ் கோபிநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகாஸ் கோபிநாத்
பிறப்பு4 நவம்பர் 1986 (1986-11-04) (அகவை 37)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிதொழில் முனைவோர்

சுகாஸ் கோபிநாத் (Suhas Gopinath, பிறப்பு1986 நவம்பர் 4 [1][2] பெங்களூர் ) இவர் ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் ஒரு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான குளோபல்ஸ் இன்க் என்ற நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியும் மற்றும் தலைவருமாவார். நிறுவனத்தை நிறுவிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 17 வயதில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில், இவர் உலகின் இளைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் இந்திய மாநிலமான கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தார்.[5] புத்தகங்களின் உதவியுடன் வலைத்தளங்களை உருவாக்க இவர் கற்றுக் கொண்டார். மேலும் தனது முதல் வலைதளமான www.coolhindustan.com என்பதை தனது 14 வயதில் உருவாக்கினார். இவர் 2000ஆம் ஆண்டில் "குளோபல்ஸ் இன்க்" என்ற நிறுவனத்தை நிறுவினார்.[1] இவர் தனது 17 வயதில் தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.[6] இவர் ஒரு காலத்தில், ஒரு நிறுவனத்தின் இளைய தலைமை நிர்வாக அதிகாரி என்று கருதப்பட்டார்.[7]

அங்கீகாரம்

[தொகு]
  • 2005ஆம் ஆண்டில், கர்நாடகாவின் ராஜ்யோத்சவ விருதைப் பெற்ற 175 பேரில் கோபிநாத் மிக இளையவராவார்.[8] [9]
  • 2007 திசம்பர் 2, அன்று, ஐரோப்பிய நாடாளுமன்றமும் மனித மதிப்புகளுக்கான சர்வதேச சங்கமும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கோபிநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதை வழங்கின.[10]
  • 2008 நவம்பரில், ஆப்பிரிக்காவில் ஐ.சி.டி.யை ஏற்றுக்கொள்வதற்காக உலக வங்கியின் ஐ.சி.டி தலைமை வட்ட அட்டவணையை பிரதிநிதித்துவப்படுத்த இவர் அழைக்கப்பட்டார். இந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் ஐ.சி.டி திறன்களை வளர்ப்பதற்கும் அங்கு சென்றார்.[11]
  • 2008-2009ஆம் ஆண்டுக்கான டாவோஸின் உலக பொருளாதார மன்றத்தால் ஈவர் "இளம் உலகளாவிய தலைவர்" என்று அறிவிக்கப்பட்டார். அந்த நிலையில் ஈவர் உலகம் முழுவதும் வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டார். ஜான் எஃப். கென்னடி அரசியல் பள்ளி மற்றும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகளாவிய தலைமை மற்றும் பொதுக் கொள்கை குறித்த சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Globals CEO Suhas Gopinath plans to list company in 2015". https://timesofindia.indiatimes.com/city/nagpur/Globals-CEO-Suhas-Gopinath-plans-to-list-company-in-2015/articleshow/15150988.cms. பார்த்த நாள்: 6 May 2018. 
  2. "Suhas Gopinath". பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  3. "India’s youngest CEO Suhas Gopinath’s journey of highs & lows". http://www.indiantelevision.com/mam/media-and-advertising/people/india-s-youngest-ceo-suhas-gopinath-s-journey-of-highs-lows-150420. பார்த்த நாள்: 2018-06-15. 
  4. bgbag. "The Hindu : WHY NOT TURN A CEO AT 17?". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  5. "Indian teen at gates of success". பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  6. "Suhas Gopinath, CEO at 17". Archived from the original on 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 24 April 2014.
  7. "Teenager hopes his firm will become another Microsoft". The Sydney Morning Herald. 2003-11-10. பார்க்கப்பட்ட நாள் 2007-07-07.
  8. "List that outgrew Hanuman's tail". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2005-11-01. Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2007-07-07.
  9. "Suhas Gopinath, Youngest CEO". PETADishoom.com. Archived from the original on 2007-07-03. பார்க்கப்பட்ட நாள் 2007-07-07.
  10. "Young Achiever Award". EICC. 2007-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-03-18. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Youth with a Mission". City News-Singapore. 2009-10-13. http://www.citynews.sg/index.php/2009/10/suhas-gopinath-youth-with-a-mission/. பார்த்த நாள்: 2009-10-25. 
  12. "Young Global Leaders 2008". World Economic Forum. 2008-03-11. Archived from the original on 26 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-03-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகாஸ்_கோபிநாத்&oldid=3554920" இலிருந்து மீள்விக்கப்பட்டது