சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீயோன் தேவாலயம்
Zion Church
07°42′35.90″N 81°41′43.90″E / 7.7099722°N 81.6955278°E / 7.7099722; 81.6955278ஆள்கூறுகள்: 07°42′35.90″N 81°41′43.90″E / 7.7099722°N 81.6955278°E / 7.7099722; 81.6955278
அமைவிடம்மட்டக்களப்பு
நாடுஇலங்கை
சமயப் பிரிவுநற்செய்திப் பறைசாற்றுத் திருக்கோவில்
வலைத்தளம்zionfm.lk
வரலாறு
நிறுவப்பட்டது1974
நிறுவனர்(கள்)இன்பம் மோசேசு
Architecture
செயல்நிலைஇயங்குகிறது

சீயோன் தேவாலயம் (Zion Church) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஒரு நற்செய்திப் பறைசாற்றுக் கிறித்தவக் கோவில் ஆகும்.[1] இக்கோவில் 1974 ஆம் ஆண்டில் இன்பம் மோசேசு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூத்த போதகர் வண. ரோசன் மகேசன் ஆவார்.[2]

சீயோன் தேவாலயம் கண்டியில் உள்ள கலங்கரைவிளக்கத் தேவாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] அத்துடன், இலங்கை சுயாதீனத் தேவாலய அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது.[3]

உயிர்ப்பு ஞாயிறுக் குண்டுவெடிப்புகள்[தொகு]

2019 ஏப்ரல் 21 ஆம் நாள் உயிர்ப்பு ஞாயிறு நாளன்று இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.[4] ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிப் பூசை நடைபெற்ற அன்று காலை 08:45 மணியளவில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. தேசிய தவ்கீத் ஜமாத் என்ற உள்ளூர் இசுலாமியத் தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் என நம்பப்படும் தற்கொலைக் குண்டுதாரி இக்குண்டை வெடிக்க வைத்ததில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர்.[5][6] குண்டுவெடிப்பின் போது தேவாலயத்தின் தலைமைக் குருவானவர் வண. ரோசன் மகேசன் நோர்வே சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]