சீமாட்டி ராய்
லேடி ராய் (Lady Rai) (கிமு 1570/1560 – 1530 ), பண்டைய எகிப்தை ஆண்ட் பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோசின் பட்டத்தரசி அக்மோஸ் நெபர்தாரியின் (கிமு 1562–1495) செவிலிப் பெண் ஆவார். எலியட் சுமித் எனும் தொல்லியல் அறிஞரால், எகிப்தின் தீபை நகரத்தில், பதினேழாம் வம்ச இராணி அக்மோஸ்-இன்ஹாபி கல்லறையின் வெளிப்புறத்தில் லேடி ராயின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டது. 30 முதல் 40 ஆண்டுகள் வாழ்ந்த லேடி ராய் கிமு 1530-ஆம் ஆண்டில் இறந்திருக்கலாம் என கணிக்கப்பட்டது.
1.510 மீட்டர்கள் (4 அடி 11.4 அங்) உயரம் கொண்ட லேடி ராய் மம்மியின் கூந்தல் அலங்காரம் இன்றளவும் சிதைவுறாது உள்ளது. இம்மம்மியின் கையில் குழந்தையின் கைகள் போன்று உள்ளது.[1]2009-ஆம் ஆண்டில் லேடி ராயின் மம்மியை மருத்துவர்கள் ஸ்கேன் செய்த போது, இதயத்தின் பெருந்தமனி தடிப்பு பெருநாடி நோயால் இறந்திருக்கலம் எனகருதுகின்றனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "XVIII'th Dynasty Gallery I". The Theban Royal Mummy Project. anubis4_2000.tripod.com. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
- ↑ Allam, Adel H. (November 18, 2009). "Computed tomographic assessment of atherosclerosis in ancient Egyptian mummies". JAMA: The Journal of the American Medical Association 302 (19): 2091–2094. doi:10.1001/jama.2009.1641. பப்மெட்:19920233.