அரசி அக்மோஸ்-நெபர்தாரி
அக்மோஸ்-நெபர்தாரி | |||||
---|---|---|---|---|---|
எகிப்திய அரசி | |||||
தீபை நகரத்தில் அரசி அக்மோஸ்-நெபர்தாரியின் சிற்பம் | |||||
துணைவர் | முதலாம் அக்மோஸ் | ||||
குழந்தைகளின் பெயர்கள் | முதலாம் அமென்கோதேப் இளவரசி அக்மோஸ்-மெரிதமுன் அக்மோஸ்-சிதாமூன் | ||||
| |||||
அரசமரபு | எகிப்தின் பதினெட்டாம் வம்சம் | ||||
தந்தை | செக்கனென்ரே தாவோ | ||||
தாய் | முதலாம் அக்கோதேப் | ||||
மதம் | பண்டைய எகிப்தின் சமயம் |
அரசி அக்மோஸ்-நெபர்தாரி படவெழுத்துக்களில் | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Ahmose Nefertari Jꜥḥ ms Nfr trj Born of Iah, the beautiful companion |
அரசி அக்மோஸ்-நெபர்தாரி (Ahmose-Nefertari) புது எகிப்திய இராச்சியத்தை நிறுவி ஆண்ட 18-ஆம் வம்சத்தின் முதல் பார்வோன் முதலாம் அக்மோசின் உடன்பிறந்த சகோதரி மற்றும் மனைவியும் ஆவார். இவரது தந்தை செக்கனென்ரே தாவோ, 17-ஆம் வம்சத்தின் பார்வோன் ஆவார். இவரது கணவர் பார்வோன் முதலாம் அக்மோஸ் மறைந்த போது இவரது மகன் முதலாம் அமென்கோதேப் கைக்குழந்தையாக இருந்த எகிப்தின் அரியணை ஏறினார். இவரது மகன் முதலாம் அமென்கோதேப் பருவ வயது அடையும் வரை, அக்மோஸ்-நெபர்தாரியே எகிப்தின் காப்பாட்சியாராக இருந்து எகிப்தை ஆட்சி செய்தார். இவரே பண்டைய எகிப்தின் முதல் பெண் அரசி ஆவார்.
பார்வோன்களின் அணிவகுப்பு
[தொகு]3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற 22 பார்வோன்களின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது அரசி அக்மோஸ்-நெபர்தாரியின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [1][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ahmose Nefertari Image of her coffin and short bio.
- Mummy of Ahmose-Nefertari by Max Miller.
- "Women in ancient Egypt"
- "Women in Power BCE 4500-1000"
- "Royal Women"
- Hatshepsut: from Queen to Pharaoh, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Ahmose-Nefertari (see index)