சீனாவில் பெண் சிசுக்கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனாவில் பெண் சிசுக்கொலை (Female infanticide in China) என்பது 2,000 ஆண்டுகள் வரலாறைக் கொண்டது.[1] பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறிஸ்தவ மறை பணியாளர்கள் சீனாவிற்கு வந்தபோது, புதிதாகப் பிறந்த குழந்தைகள் ஆறுகளிலோ அல்லது குப்பைக் குவியல்களிலோ வீசப்படுவதைக் கண்டனர்.[2][3] பதினேழாம் நூற்றாண்டில் மத்தேயோ ரீச்சி இந்த நடைமுறை சீனாவின் பல மாகாணங்களில் நிகழ்ந்ததாக ஆவணப்படுத்தினார். மேலும் பெண் சிசுக் கொலைக்கு வறுமையே முதன்மைக் காரணம் என்று கூறினார்.[3] இந்த நடைமுறை 19 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பொதுவுடமை சகாப்தத்தின் போது வேகமாக வீழ்ச்சியடைந்தது, [4] ஆனால் 1980 களின் முற்பகுதியில் ஒரு குழந்தை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மீண்டும் ஒரு பிரச்சினையாக உள்ளது. [5] 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பு சீனாவின் பிரதான நிலப்பரப்பில் 105.07 ஆண்-பெண் விகிதத்தைக் காட்டியது, சீன மக்கள் குடியரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தொடங்கியதிலிருந்து இது மிகக் குறைவு.[6]

வரலாறு[தொகு]

சீனாவில் குழந்தைகளை புதைத்தல் (ப.40, மார்ச் 1865, XXII) [7]
சீன சிசுக்கொலை சுமார் 1800

19 ஆம் நூற்றாண்டில் இந்த நடைமுறை பரவலாக இருந்தது. கிங் நூல்களில் இருந்து வாசிப்புகள் ni nü (பெண்களை மூழ்கடிப்பது) என்ற வார்த்தையின் பரவலைக் காட்டுகின்றன. மேலும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு நீரில் மூழ்கடிப்பது மிகவும் பொதுவான முறையாகும். மூச்சுத்திணறல் மற்றும் பட்டினி போன்றவை பயன்படுத்தப்பட்ட மற்ற முறைகள். [a][9] குழந்தை ஒரு மரக்கூடையில் வைக்கப்பட்டது. புத்த கன்னியாஸ்திரிகள் ஒரு குழந்தையை விட்டுச் செல்வதற்காக "குழந்தை கோபுரங்களை" உருவாக்கினர். [10] 1845 ஆம் ஆண்டில் ஜியாங்சி மாகாணத்தில், ஒரு மறைபணியாளர் ஒருவர், இந்தக் குழந்தைகள் இரண்டு நாட்கள் வரை உயிர் பிழைத்ததாகவும், அந்த வழியாகச் செல்பவர்கள் குழந்தையைப் புறக்கணிப்பார்கள் என்றும் எழுதினார். [11] மறைபணியாளர் டேவிட் அபீல் 1844 இல் அனைத்து பெண் குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை பிறக்கும்போதே அல்லது அதற்குப் பிறகு கொல்லப்பட்டதாக அறிவித்தார். [12]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "As soon as the little girls are born, they are plunged into the water in order to drown them or force is applied to their bodies in order to suffocate them or they are strangled with human hands. And something even more deplorable is that there are servants who place the girl in the chamber pot or in the basin used for the birth, which is still filled with water and blood and, shut away there, they die miserably. And what is even more monstrous is that if the mother is not cruel enough to take the life of her daughter, then her father-in-law, mother-in-law, or husband agitates her by their words to kill the girl."[8]

சான்றுகள்[தொகு]

  1. Mungello 2012, ப. 144.
  2. Milner 2000, ப. 238-239.
  3. 3.0 3.1 Mungello 2012, ப. 148.
  4. Coale & Banister 1994.
  5. White 2006.
  6. "China's latest census reports more balanced gender ratio - Xinhua | English.news.cn". 2022-07-05. Archived from the original on 2022-07-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-05.
  7. "Burying Babies in China". Wesleyan Juvenile Offering XXII: 40. March 1865. https://books.google.com/books?id=1VwEAAAAQAAJ. பார்த்த நாள்: 1 December 2015. 
  8. Mungello 2008, ப. 17.
  9. Mungello 2008, ப. 9.
  10. Lee 1981.
  11. Mungello 2008.
  12. Abeel 1844.

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]