சீனமங்கலம் பாப்பாத்தி அம்மாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ பாப்பாத்தி அம்மாள்
பெயர்
வேறு பெயர்(கள்):ஆதி சக்தி, பாப்பாத்தி அம்மா, தேவி
தமிழ்:இது இரண்டு பெண் தெய்வங்களின் கோவில் ஆகும்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவு:சீனமங்கலம், தமிழ்நாடு 63041
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ஒரு ஆசாரி குடும்பத்தினர்
பாப்பாத்தி அம்மாவின் உருவம்

பாப்பாத்தி அம்மாள் கோயில் என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சீனமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோயிலாகும். இங்கே இரண்டு பெண் தெய்வங்கள் பாப்பாத்தி அம்மன் என வழிபடப்படுகின்றன.

பாப்பாத்தி அம்மாள் சன்னதி அந்த காலத்தில் எடுத்தது

சொல்லிலக்கணம்[தொகு]

பிராமணப் பெண்களை பாப்பாத்தி என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. கம்மாயில் மூழ்கி இறந்த பெயர் அறியாத இரு பெண்களையும் பாப்பாத்தி அம்மன் என வழிபட்டு வந்துள்ளனர்.

தல வரலாறு[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் கிராமத்தில் வாழ்ந்த இரு சகோதரிகள் கம்மாயில் மூழ்கி இறந்துள்ளனர். அந்த இறப்பினைக் கண்டவர்கள் தங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு நோய் தாக்கிய போது இறந்த‌சிறுமிகளை பாப்பாத்தி அம்மனாக வழிபட தொடங்கியுள்ளனர்.

அவர்கள் அந்த ஊரில் உள்ள கம்மாய் கரையில் தினமும் வந்து குளிப்பது வழக்கம். அதேபோல ஒரு நாள் அந்த இரு சிறுமிகளும் குளிக்க சென்றனர். அப்போது கம்மாய் கரையில் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் அந்த இரண்டு சிறுமிகள் தலையில் மண்ணை தேய்த்துக் கொண்டார்கள். பின்னர் ஒரு பெண் நீரில் இறங்கினாள் அப்போது அதிகமாக தண்ணீர் வந்ததால் அந்தப் பெண் சிறுமி நீரில் மூழ்கி விட்டாள் இதை கண்ட இன்னொரு சிறுமி அவளைக் காப்பாற்றுவதற்காக நீரில் இறங்கினாள் அதிகமான தண்ணீர் வந்ததால் ‌அவளும் முழ்ங்கி விட்டாள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பத் தலைவர் அந்த இரண்டு பெண் சிறுமிகளை காப்பாற்ற நீரில் பாய்ந்தார். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அந்த குடும்பம் மிகவும் அச்சப்பட்டது. அச்சத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் சாப்பிட வந்த சாப்பாட்டை கம்மாய் கரையிலே கொட்டி விட்டு அங்கே இருந்து பின்பக்கம் பார்க்காமல் சென்று விட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு மிகுந்த காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவம் பார்த்தும் காய்ச்சல் குறையவில்லை.

பிறகு கோவிலுக்கு போய் மந்திரித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர். பின்னர் அந்த குழந்தைகள் மேல் ஆவியாக வந்த அந்த இரண்டு சிறுமிகள் தாங்கள் அனாதைகள் எங்களுக்கு சொந்தம் பந்தம் என்று யாரும் கிடையாது நீங்கள் என்னை காப்பாற்ற வந்தீர்கள் அதை நான் ஆவியாக நின்று கண்டேன் அதுதான் உங்கள் கூடையிலேயே வந்து விட்டேன் எனக்கு ஆதரவு தாருங்கள் நான் என்றென்றும் உங்க குடும்பத்தை காப்பேன் என்று வாக்களித்தாள். குடும்பத்தினரும் அதற்கு ஒத்துக் கொண்டனர். பிறகு அந்த குடும்பத்தினர் ஆச்சரியப் படும்படி குழந்தைகளுக்கு காய்ச்சல் குணமானது.

பாப்பாத்தி அம்மாள் எங்கள் வீட்டில் இருக்கும் புகைப்படம்

அப்போதிலிருந்து நான்கு தலைமுறைகளாக அந்த இரண்டு சிறுமிகளையும் அக்குடும்பத்தினர் வழிபட்டுவருகிறனர்.

வழிபாடு[தொகு]

பாப்பாத்தி அம்மாள் வீட்டிற்கும் கோவில் உள்ளே புகைப்படம்

இந்த பாப்பாத்தி அம்மாளுக்கு சிறந்த நாளாக கருதப்படுவது ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஆகும். அப்போது அந்த இரண்டு சிறுமிகளுக்கும் பிடித்தமான புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், காதோல கருகமணி மற்றும் தட்டு நிறைய மல்லிகை பூ என்று பல பொருட்களை வைத்து பொங்கலிடுவர்.

பாப்பாத்தியம்மாள் வடிவம்[தொகு]

தொடக்கத்தில் இரு பூக்களை பாப்பாத்தி அம்மனாக நினைத்து வழிபட்டு வந்துள்ளனர். பூசை அறையில் மஞ்சளைக் கரைத்து வட்டவடிவமாகத் தேய்த்து குங்குமத்தால் ஐந்து இடங்களில் பொட்டு வைத்து வழிபடுகின்றனர். உருவம் இல்லாமல் வழிபட்டு வந்த பாப்பாத்தி அம்மனுக்கு தற்போது இரு சிறுமிகள் வடிவம் தந்து வழிபட்டு வருகின்றனர்.


அந்த காலத்தில் புடவை எடுப்பதற்கு பதிலாக சித்தாடை எடுத்து வைத்து வழிபடுவார்கள். அவர்கள் சிறுமிகள் அதனால் அவர்களுக்கு சித்தாடை மிகவும் பிடிக்கும் என்பதால். சில பேர் ஆடி மாதம் அம்மாவாசையில் அல்லது ஆடி மாத வெள்ளிக்கிழமையில் கூட வழிபடுவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]