சி. கே. இரவுல்ஜி
சி. கே. இரவுல்ஜி | |
---|---|
அமைச்சர் குசராத்து | |
பதவியில் 1995–1998 | |
தொகுதி | கோத்ரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | https://www.ckraulji.com |
சி. கே. இரவுல்ஜி என்பவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குசராத்து சட்டமன்றத்திற்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்பொழுது அமைச்சராக உள்ளார்.[1][2][3] இரவுல்ஜி பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[4]
பணி
[தொகு]இரவுல்ஜி குசராத் சட்டப் பேரவையின் மூன்றாவது முறையாக உறுப்பினராக உள்ளார். 2007, 2012 மற்றும் 2017-ல் இவர் கோதாரா சட்டமன்ற உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[5][6] இவர் அக்டோபர் 2017-ல் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து விலகிப் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[7][8]
குசராத்து வன்முறை 2002 வழக்கில் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த தண்டை நீக்க விண்ணப்பத்தைப் பரிசீலித்த குழுவில் சி. கே. இரவுல்ஜி உறுப்பினராக இருந்தார். குற்றவாளிகள் பதினான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, விடுவிக்கும் மனுவை ஏற்கும்படி குழு பரிந்துரைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரையால் 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இரவுல்ஜி ஜெய்னாபென் என்பாரை மணந்தார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[9] 26 செப்டம்பர் 2017 அன்று, இரவுல்ஜியின் குடியிருப்புக்கு அருகில் ஒரு சிறுத்தை காணப்பட்டது. இச்சிறுத்தை மூன்று நாட்களுக்குப் பிறகு பிடிபட்டது.[10]
சர்ச்சைப் பேச்சு
[தொகு]ஆகத்து 19, 2022 அன்று, பில்கிசு பானோ வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரின் நடத்தை நன்றாக இருப்பதாக இரவுல்ஜி சர்ச்சைக்குரிய வகையில் விவரித்தார். இவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது என்றார். இரவுல்ஜி மேலும் "இவர்கள் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் நல்ல சமஸ்காரம் கொண்டவர்கள் என்று அறியப்படுகிறார்கள்" எனத் தெரிவித்தார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "C.K Raulji Victory Time". Daily News and Analysis. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "C.K Raulji Question in Gujarat Assembly". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Promote Gujarat Tourism". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Congress MLA CK Raulji". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Winners of Gujarat Assembly Election". oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Winners of Gujarat Assembly Election". oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Resign Congress Party". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
- ↑ "Got Ticket from BJP". firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 23 November 2017.
- ↑ "C.K Raulji (Winner) Panchmahal (Godhra)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 14 December 2016.
- ↑ "Leopard at MLA's house caged". The Times of India (in ஆங்கிலம்). September 30, 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-03-03.
https://www.shethepeople.tv/news/bjp-ck-raulji-statement-bilkis-bano-case/
வெளி இணைப்புகள்
[தொகு]- குஜராத் சட்டமன்றம் பரணிடப்பட்டது 2017-09-18 at the வந்தவழி இயந்திரம்