சி. அனந்தராமகிருட்டிணன்
சிவசைலம் அனந்தராமகிருட்டிணன் | |
---|---|
பிறப்பு | 1905 ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்) (தற்போதைய திருநெல்வேலி மாவட்டம்), சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | ஏப்ரல் 18, 1964 சென்னை, இந்தியா | (அகவை 58–59)
பணி | தொழிலதிபர் |
பிள்ளைகள் | அ. சிவசைலம் மற்றும் அ. கிருட்டிணமூர்த்தி |
சிவசைலம் அனந்தராமகிருட்டிணன் (Sivasailam Anantharamakrishnan) (1905 – 18 ஏப்ரல் 1964), அன்புடன் "ஜே" என்று அழைக்கப்படும் இவர், 1945 முதல் 1964 வரை அமல்கமேசன்ஸ் குழுமத் தொழில்களை நிறுவி வழிநடத்திய ஒரு இந்திய தொழிலதிபராவார்.[1]
வாழ்க்கை
[தொகு]1905 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த இவர் திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கல்வி பயின்றார். 1935 இல், சிம்ப்சன்ஸ் குழும நிறுவனங்களில் செயலாளராக சேர்ந்தார். 1938 இல், சிம்ப்சன்ஸ் குழுமத்தின் நிர்வாகத்தில் முதல் இந்திய இயக்குநரானார்.[2][3][4] இவர் 1953 முதல் 1964 இல் தான் இறக்கும் வரை குழுவின் தலைவராக பணியாற்றினார்.[5]
அனந்தராமகிருட்டிணன் தனது வெற்றிகரமான வணிக நடைமுறைகள், தொழிற்சங்கங்களின் திறமையான மேலாண்மை மற்றும் சென்னையின் தானியங்குத் துறையின் வளர்ச்சியைத் தூண்டியதற்காக "இந்தியாவின் டிட்ராயிட்" என்ற பெயரைப் பெற்றதற்காக நினைவுகூரப்படுகிறார்.[6][7] இதன் விளைவாக, இவர் "தென்னிந்தியாவின் ஹென்றி போர்டு" என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அனந்தராமகிருஷ்ணன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் 1905 நவம்பர் 11 அன்று பிறந்தார்.[8] திருநெல்வேலியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், சென்னையிலுள்ள அரசு வணிகவியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.[9] 1930 இல், இவர் பிரேசர் மற்றும் ராஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணக்காளராக சேர்ந்தார்.[2]
இறப்பு
[தொகு]அனந்தராமகிருட்டிணன் 18 ஏப்ரல் 1964இல் தனது 59வது வயதில் இறந்தார்.[6][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Muthiah, Pg 52
- ↑ 2.0 2.1 Muthiah, S.. "The road to amalgamation".
- ↑ Subrahmanya, Susheela (1962). Southern Economist. p. 8.
- ↑ Venkataraman, P. (2007). Industrial Relations. APH Publishing. p. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-313-0072-5.
- ↑ Federation of Indian Chambers of Commerce and Industry (1999). Footprints of Enterprise: Indian Business Through the Ages. Oxford University Press. pp. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564774-2.
- ↑ 6.0 6.1 Sundaram, V. (April 2007). "Remembering J -A Henry Ford of South India". News Today. http://newstodaynet.com/2007sud/apr07/180407.htm.
- ↑ Bhavan's Journal. 1964. p. 36.
- ↑ Ramasamy, Vijaya (2007). Historical Dictionary of Tamils. Scarecrow Press. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-5379-9.
- ↑ Rau, K. H. (1964). Transport. p. 25.
- ↑ Bhavan's Journal. 1964. p. 13.
குறிப்புகள்
[தொகு]- Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88661-24-4.