சிவெத்லானா சவீத்சுக்கயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா
Svetlana Yevgenyevna Savitskaya
விண்வெளி வீரர்
தேசியம் சோவியத் / ரஷ்யர்
பிறப்பு ஆகத்து 8, 1948 (1948-08-08) (அகவை 74)
மாஸ்கோ, உருசியா
வேறு தொழில் வானோடி பொறியாளர்
விண்பயண நேரம் 19நாள் 17மணி 06நிமி
தெரிவு 1980
பயணங்கள் சோயுஸ் டி-7, சல்யூட் 7, சோயுஸ் டி-5, சோயுஸ் டி-12

சிவெத்லானா யெவ்கேனியெவ்னா சவீத்ஸ்கயா (Svetlana Yevgenyevna Savitskaya, உருசியம்: Светла́на Евге́ньевна Сави́цкая; பிறப்பு: ஆகத்து 8, 1948), என்பவர் முன்னாள் சோவியத் விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் சோயூசு டி-7 விண்கலத்தில் 1982 இல் முதற் தடவையாகப் பயணித்தார். இவரே விண்ணுக்குச் சென்ற இரண்டாவது பெண்ணாவார். (வலண்டீனா டெரெஷ்கோவா முதலாவதாகச் சென்றார்).

சல்யூத் 7 விண்வெளி நிலையத்தில் 1984 சூலை 25 இல் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். இவர் விண்வெளி நிலையத்துக்கு வெளியே 3 மணி 35 நிமிடங்கள் நேரம் நின்றிருந்தார்.[1][2]

இரண்டு தடவைகள் "சோவியத் வீரர்" என்ற நாட்டின் உயர் விருதினையும் பெற்றார்.[3]

சவீத்ஸ்கயா விண்வெளித் திட்டப் பணிகளில் இருந்து 1993 இல் ஓய்வு பெற்றார். உருசியக் கூட்டமைப்பின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உருசிய நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். தொடர்ந்து நான்கு தடவைகள் இவர் உருப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biographies of USSR / Russian Cosmonauts". Space Facts. 9 August 2012. 18 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Space welding anniversary!". Orbiter-Forum. Jelsoft Enterprises Ltd. 16 July 2009. 18 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names, Volume 1. New York: Springer. பக். 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-00238-3. https://books.google.com/books?id=KWrB1jPCa8AC&lpg=PP1&dq=isbn%3A3540002383&pg=PA352#v=snippet&q=Sveta&f=false. 
  4. Role in Russian State Duma

வெளி இணைப்புகள்[தொகு]