சிவிபிசி இயந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவிபிசி(CVPS=Currency verification and processing system) இயந்திரம் என்பது இந்திய அரசின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில், காலாவதியான உரூபாய் நோட்டுகளை, மிக விரைவாகத் தரம் பிரிக்கப் பயன்படும் எந்திரம் ஆகும். இந்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெற்று, அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளைத் தருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் சேருகின்றன. இந்நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் ‘இஷ்க்’ எனப்படும் இடத்தில் பத்திரமாக வைக்கப்பட உள்ளது. பின்னர் இந்நோட்டுகளில் மறு சுழற்சிக்குப் பயனுள்ள நோட்டுகள், பயன்படாத நோட்டுகள் என சிவிபிசி இயந்திரம் மூலம் தனித்தனியாக பிரிக்கப்படும்.

அறிமுகம்[தொகு]

எதிர்காலத்தில் பயன்படாத, இந்த ரூபாய் நோட்டுகளை, மிகவும் பாதுகாப்பாகவும், வேகமாகவும் பிரிக்கும், இந்த எந்திர முறையை 2003 ஆம் ஆண்டு, அப்பொழுது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த, பிமல் சலன்(Dr. Bimal Jalan) அறிமுகப்படுத்தினார். இவர் சனவரி 1999 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியில், 'சிறந்தநோட்டுக் கொள்கை'யினை அறிவித்தார்.( Clean Note Policy பரணிடப்பட்டது 2014-10-19 at the வந்தவழி இயந்திரம் of RBI.)[1] அதன் அடிப்படையில், இந்த எந்திரம், துணை ஆளுநராக இருந்த வேப்ப காமேசம் (Vepa Kamesam) தலைமையில் முதற்கட்டமாக 22 வங்கிகளில் நிறுவப்பட்டன.[2].

செயற்பாடு[தொகு]

ஒரு சிவிபிசி இயந்திரமானாது, ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரம் நோட்டுகளை பிரிக்க முடியும். அப்பொழுது கள்ள நோட்டை தனியாகவும், நல்ல நோட்டைத் தனியாகவும் விரைவில் கண்டறிந்து பிரித்து கொடுக்கும் திறன் கொண்டது ஆகும். அத்துடன் மறுசுழற்சிக்கு பயன்படும், பயன்படாத நோட்டுகளையும் தனித்தனியாகக் கண்டறியும் திறனுடையது. அப்பொழுது பயன்படாத உரூபாய் நோட்டுகளை, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி தனியாக தந்து விடும். அத்துடன் பயன்படும் நோட்டுகளை, மறு சுழற்சிக்கு ஏற்றவாறு தயார் செய்து தரும் திறன் கொண்டதாகும்.

மறுசுழற்சி பொருட்கள்[தொகு]

காகிதக் கழிவு
காகிதப் பொருட்கள்

இந்த மறுசுழற்சி நோட்டுகள், சுற்றுப்புறச் சூழலை கெடுக்கா வண்ணம், காகிதக்கூழாக மாற்றப்படுகின்றன. பின்னர்,அதிலிருந்து அலுவலகப் பயன்பாட்டுப் பொருட்கள் தயாரிக்கப்பட பயன்படுத்தப்படுகின்றன. குப்பைத்தொட்டிகள், மேசைமீது வைக்கப்படும் காகிதங்கள் காற்றில் பறக்காதபடி, அதன்மீது வைக்கப்படும் காகிதக்கல், எழுதுகோல்கள் வைக்கப்பயன்படும் சிறுகுவளைகள் போன்றவை சில மறுசுழற்சிக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "RBI Notification on Clean Note Policy".
  2. "Kamesam exhorts banks to adopt CVPS" (PDF).

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவிபிசி_இயந்திரம்&oldid=3367509" இலிருந்து மீள்விக்கப்பட்டது