சிவப்புக் கங்காரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்புக் கங்காரு[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
முதுகெலும்பு தொகுதி
வகுப்பு:
பாலூட்டிகள்

சிவப்புக் கங்காரு, கங்காரு இனத்திலேயே பெரிய விலங்கு ஆகும். இது ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப் பெரிய முலையூட்டி ஆகும்.[2]

வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகைகளில் இதற்கே மிகப் பெரிய வயிற்றுப்பை உள்ளது. இவை ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள செழுமையான பகுதிகள், கிழக்குப் பகுதியில் உள்ள கரையோரப்பகுதி, மற்றும் வட பகுதியில் உள்ள மழைக்காட்டுப் பகுதி தவிர்ந்த மற்றைய பகுதிகள் அனைத்திலும் பரந்து காணப்படுகின்றன. இவை சிறிய பற்றைச் செடிகளையும், காட்டுத்தாவரங்களையும் உண்டு வாழ்கின்றன. இவற்றின் மலம் உலர்ந்ததாகவே கானப்படுகிறது. இதன் உடலில் நீர் சேமிப்பதற்கான ஓர் உபாயமாகவே இது கருதப்படுகிறது. எனினும், வியர்வையால் இதன் உடலில் இருந்து நாளாந்தம் சிறிதளவு நீர் வெளியேற்றப்படுவதனால், இந்த சிவப்புக் கங்காருக்கள் நாளாந்தம் நீர் தேடி அப்பகுதிகளிலுள்ள சிறிய ஏரிகளை நாடுகின்றன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புக்_கங்காரு&oldid=3244810" இலிருந்து மீள்விக்கப்பட்டது