சிவபாலன் (விளையாட்டு வீரர்)
தோற்றம்
சிவபாலன் (Sivabalan) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கைப்பந்தாட்ட வீர்ராவார். தேசிய இளையோர் கைப்பந்தாட்ட அணி மற்றும் தேசிய மூத்தோர் கைப்பந்தாட்ட அணி இரண்டிலும் இவர் விளையாடியுள்ளார். சென்னை சுங்கத் துறையின் கைப்பந்தாட்ட அணியின் தலைவராக இவர் தற்போது விளையாடி வருகிறார். முன்னதாக இந்தியன் ஓவர்சீசு வங்கி அணிக்காக விளையாடினார். தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டம் இவரது சொந்த ஊராகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இவர் பயிற்சிபெற்றார். சென்னை லயோலா கல்லூரியில் இவர் கல்வி கற்றார்[1][2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IOB (Chennai) claims men's title". Archived from the original on 2008-03-06. Retrieved 2019-02-12.
- ↑ "Steering towards success". Archived from the original on 2004-07-28. Retrieved 2019-02-12.