உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாமி ஜெயக்குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழினி
பிறப்பு: (1972-04-23)23 ஏப்ரல் 1972
பிறந்த இடம்: பரந்தன், கிளிநொச்சி மாவட்டம், இலங்கை
இறப்பு: அக்டோபர் 18, 2015(2015-10-18) (அகவை 43)
இயக்கம்: தமிழீழ விடுதலைப் புலிகள்
பணி விடுதலைப் புலிகளின் மகளிர் அணி அரசியல் பிரிவுத் தலைவர்
வாழ்க்கைத் துணை எம், ஜெயக்குமரன்
பிள்ளைகள் இல்லை

தமிழினி என்ற இயக்கப் பெயரைக் கொண்ட சிவகாமி ஜெயக்குமரன் (23 ஏப்ரல் 1972 - 18 அக்டோபர் 2015) தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும், எழுத்தாளரும் ஆவார். புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவர்.

சிவகாமி 1972 ஏப்ரல் 23 அன்று பரந்தனில் சுப்பிரமணியம், சின்னம்மா ஆகியோருக்குப் பிறந்தார். 1991-ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்து தமிழினி என்ற இயக்கப் பெயரைப் பெற்றார். 2009 மே இறுதிப் போரின் போது வவுனியா அகதிகள் முகாமில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் ஓராண்டு காலம் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு[1] 2013 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு அவரது குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்.[2]

தமிழினி 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த ஜெயன் தேவா என அழைக்கப்படும் மகாதேவன் ஜெயக்குமரன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3]

மறைவு

[தொகு]

தமிழினி புற்றுநோய் காரணமாக கொழும்பு மகரகமை புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், 2015 அக்டோபர் 18 இல் தனது 43-ஆவது அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. டி. பி. எஸ். ஜெயராஜ் (29 சூன் 2012). "From Welikade to Vavuniya: Tale of Thamilini's transfer". Retrieved 18 அக்டோபர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Thamilini dies of cancer". டெய்லி மிரர். 18 அக்டோபர் 2015. Retrieved 18 அக்டோபர் 2015.
  3. "Ex-LTTE Women's Political Head Thamilini dies of cancer at 43". தமிழ்நெட். 18 அக்டோபர் 2015. Retrieved 19 அக்டோபர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகாமி_ஜெயக்குமரன்&oldid=3941698" இலிருந்து மீள்விக்கப்பட்டது