சில்ரன் ஆப் ஹெவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சில்ரன் ஆப் ஹெவன்
இயக்குனர் மஜித் மஜீதி
கதை மசித் மசிதி
நடிப்பு அமீர் பாரூக் ஹஷேமியான், பாஹரே சித்திக்கீ
வெளியீடு 1997
கால நீளம் 89 நிமிடங்கள்
மொழி பாரசீகம்

சொர்க்கத்தின் குழந்தைகள் (பாரசீகம்: بچه‌های آسمان, பாச்சிகா-யெ அசெமான்) என்பது 1997 ஆம் ஆண்டு இரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த ஒரு குடும்பத் திரைப்படம் ஆகும். இதனை மசித் மசிதி எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சில்ரன் ஆப் ஹெவன் (Children of heaven) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

இப்படம் ஒரு சகோதரன் சகோதரி இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலணிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், அதை சமாளிக்க அவர்கள் கையாளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான அகாதமி விருது கிடைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்ரன்_ஆப்_ஹெவன்&oldid=2129585" இருந்து மீள்விக்கப்பட்டது