சிலேசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலேசிய மொழி
Ślůnsko godka
நாடு(கள்)போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா
பிராந்தியம்மேல் சிலேசியா / சிலேசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
> 1 250 000[மேற்கோள் தேவை]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3szl

சிலேசிய மொழி (Silesian: ślůnsko godka, ślůnski, sometimes also pů našymu) போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும். அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000[1] மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக 2011 கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது.

சிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர்.

எழுத்துமுறை[தொகு]

சிலேசிய மொழி போலிய மொழியின் எழுத்துமுறையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தது. எனினும் 2006 இல் பண்டைய சிலேசிய எழுத்துமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சிலேசிய விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தப்படுகிறது.

  • Aa Bb Cc Ćć Čč Dd Ee Ff Gg Hh Ii Jj Kk Ll Mm Nn Ńń Oo Pp Rr Řř Ss Śś Šš Tt Uu Ůů Ww Yy Zz Źź Žž
  • And some digraphs: Ch Dz Dź Dž.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Narodowy Spis Powszechny Ludności i Mieszkań 2011. Raport z wyników - Central Statistical Office of Poland
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலேசிய_மொழி&oldid=3244703" இலிருந்து மீள்விக்கப்பட்டது