சிற்றரத்தை
தோற்றம்
| சிற்றரத்தை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Commelinids |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | Alpinioideae |
| சிற்றினம்: | Alpinieae |
| பேரினம்: | Alpinia |
| இனம்: | A. officinarum' |
| இருசொற் பெயரீடு | |
| Alpinia officinarum (லி.) Henry Fletcher Hance | |
சிற்றரத்தை (Alpinia officinarum) என்பது சீனாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் இஞ்சிக் குடும்பத் தாவரமாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிற் பயிரிடப்படுகிறது. ஆசியாவில் இது சமையற் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவக் குணங்கள்
[தொகு]சிற்றரத்தை ஒரு வலி நிவாரணி. சளி, இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கத்தைக் குணப்படுத்தும். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.[1][2]
மற்ற பயன்கள்
[தொகு]பண்டைய ஐரோப்பாவில் சிற்றரத்தை ஒரு நறுமணப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுதும் கிழக்கு ஐரோப்பாவில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் சிற்றரத்தையைக் கசாயமாகவும் வாசனைத் திரவியமாகவும் பயன்படுத்துவர். மற்ற ஆசிய நாடுகளில் கறிகள், பானங்கள் மற்றும் உறைகூழ்களில் சிற்றரத்தை பயன்படுத்தப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Gualtiero Simonetti (1990). Stanley Schuler (ed.). Simon & Schuster's Guide to Herbs and Spices. Simon & Schuster, Inc. ISBN 0-671-73489-X.
- ↑ Grieve, M. "Galangal". From A Modern Herbal, 1931.