சிறீ வெங்கடேசுவரா உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி
Other name | SVHEC |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2008 |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.svhec.com |
சிறீ வெங்கடேஸ்வரா உயர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரி (Shree Venkateshwara Hi-Tech Engineering College) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. 2008-2009 கல்வியாண்டில் இக்கல்லூரி நிறுவப்பட்டது.
வழங்கப்படும் பாடங்கள்
[தொகு]இக்கல்லூரியானது மூன்று இளநிலை பொறியியல் படிப்பு (பி.இ) மற்றும் ஒரு இளநிலை தொழில்நுட்ப படிப்பு (பி.டெக்) போன்றவற்றை கோவை அண்ணா பல்கலைக்கழக அங்கிகாரத்துடன் வழங்குகிறது.
இளநிலை பாடங்கள்
[தொகு]பி.இ
- மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- மின்னணு மற்றும் பொடர்பியல் பொறியியல்
- கணினி அறிவியல் பொறியியல்
- இயந்திரப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
பி.டெக்
முதுநிலை படிப்புகள்
[தொகு]எம்.இ
- அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
- கணினி அறிவியல் பொறியியல்
- உற்பத்தி பொறியியல்
சேர்க்கை நடைமுறை
[தொகு]இளங்கலை மாணவர்கள் தங்கள் 12 ஆம் வகுப்பு (உயர்நிலை பள்ளி) மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். சேர்க்கையானது தமிழக அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசு ஆலோசனை மற்றும் நடைமுறைகள் மூலம் செய்யப்படுகிறது.