சிறீ காளீசுவரி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ காளீசுவரி கல்லூரி
வகைசுயநிதி, இருபாலர் கலை அறிவியல் கல்லூரி
உருவாக்கம்2000
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://kaliswaricollege.edu.in/

சிறீ காளீசுவரி கல்லூரி (Sri Kaliswari College) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விருதுநகர் நெடுஞ்சாலையில் சிவகசியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும்.

சிறீ காளீசுவரி கல்லூரியானது சிவகாசி பட்டாசு தொழிலில் முன்னணியில் உள்ள, சிறீ காளீசுவரி குழுமத்தின் அறக்கட்டளையால் துவக்கப்பட்டது. கல்லூரி துவக்கிய புதிதில் அதாவது 2000-2001 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கல்லூரியானது மூன்று படிப்புகளுடன் சிவகாசி நகரில் தற்காலிகமாக இயங்கியது. மார்ச் 19, 2001 அன்று கல்லூரி புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[1]

2000-2001ஆம் ஆண்டில் வெறும் மூன்று படிப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்போது 15 இளநிலைப்பட்டப்படிப்புகளும், 9 முதுநிலை படிப்புகளும், இரு ஆய்வுப் படிப்புகளும் வழங்கப்படுகிறது.[2] இக்கல்லூரியானது மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.

துறைகள்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வணிகவியல்
  • கணினி அறிவியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • உயிர்த்தொழில்நுட்பவியல்
  • தகவல் தொழில்நுட்பவியல்
  • சுற்றுலா உணவக நிர்வாகம்
  • வணிக நிர்வாகவியல்
  • பெருநிறுவ செயான்மை

மேற்கோள்கள்[தொகு]

  1. admin. "Home". Sri Kaliswari College - Autonomous (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-15.
  2. https://collegedunia.com/college/55715-sri-kaliswari-college-sivakasi/courses-fees
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_காளீசுவரி_கல்லூரி&oldid=3632087" இலிருந்து மீள்விக்கப்பட்டது