சிறிகௌரி சாவந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறிகௌரி சாவந்த் அல்லது கவுரி சாவந்த் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஒரு திருநங்கை செயற்பாட்டாளராவர். [1] திருநங்கைகள் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சகி சார் சௌகியின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். [2] விக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள இவர், [3] [4] [5] மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. [6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கணேஷ் என்ற ஆணாக மஹாராஷ்டிரத்தின் புனேயில் காவல் துறை அதிகாரியின் மகனாகப் பிறந்த சாவந்த், அங்கேயே வாழ்ந்துள்ளார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்ட காரணத்தினால், பாட்டியால் வளர்க்கப்பட்டுள்ளார், ஆனாலும் குடும்பத்தினருக்கு தொல்லையாக இருக்க வேண்டாமென எண்ணி, தனது பதினான்காம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.[7]

ஆக்டிவிசம்[தொகு]

2000 ஆம் ஆண்டு, சகி சார் சௌகி என்ற அறக்கட்டளையை கவுரி நிறுவியுள்ளார்.இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கிறது மேலும் திருநங்கைகளுக்கு உடல்நல மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 2014 ஆம் ஆண்டில், திருநங்கைகளின் தத்தெடுப்பு உரிமைக்காக இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த முதல் திருநங்கை ஆவார். உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் வழக்கில் கவுரியும் முக்கிய மனுதாரர். இவ்வாறு திருநங்கைகளின் பல்வேறு உரிமைகளுக்காக, சட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.2008ஆம் ஆண்டு காயத்ரி என்ற குழந்தையின் தாயார் எய்ட்ஸ் நோயால் இறந்ததையடுத்து, அவரை சட்டப்படி தத்தெடுத்துள்ளார். [7] [8]

பொழுதுபோக்கு துறையில்[தொகு]

2017 ஆம் ஆண்டு, விக்ஸ் விளம்பரத்தில் கவுரி மற்றும் அவரது வளர்ப்பு மகளின் கதையும் இடம்பெற்றது. இந்த விளம்பரம் விக்ஸ்ஸின் 'டச் ஆஃப் கேர்' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.[3]

கவுரி சாவந்த்தின் கதாபாத்திரமாக,பிரபல நடிகை சுஷ்மிதா சென் நடித்துள்ள தளி(கைதட்டல்) என்ற வலைத்தொடர் 2023 ஆம் ஆண்டு, டிசம்பரில் வெளியானது. [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gauri Sawant- How I became a Mother - Mumbai Mirror -". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/gauri-sawant-how-i-became-a-mother/articleshow/57995471.cms. 
  2. "Here Is The Real Life Story Of Transgender Activist Gauri Sawant Of Groundbreaking Vicks Ad". The Indian Feed இம் மூலத்தில் இருந்து 2018-04-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180421232302/https://www.theindianfeed.in/vicks-ad-gauri-sawant/. 
  3. 3.0 3.1 "How Activism, Adoption and an Ad Changed a Trans Woman's Life - The Wire". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2018-04-21.
  4. "The story of Gauri Sawant - A transgender mother". www.timesnownews.com.
  5. "If something happens to me, I don't want her to return to the streets: Gauri Sawant". 9 April 2017.
  6. "Maharashtra Transgender Activist Becomes Poll Panel's Goodwill Ambassador". NDTV.com. 2019-03-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21.
  7. 7.0 7.1 "Against All Odds: Activist Gauri Sawant Has Been Fighting For Transgender Rights All Her Life" (in en-US). 2017-05-30. https://thelogicalindian.com/my-social-responsibility/gauri-sawant-transgender-activist/. 
  8. YouTube- Gauri Suresh Sawant interview, TedX
  9. "Who is Shreegauri Sawant, the transgender activist portrayed by Sushmita Sen in Taali?". cnbctv18.com (in ஆங்கிலம்). 2022-10-06. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிகௌரி_சாவந்த்&oldid=3728293" இலிருந்து மீள்விக்கப்பட்டது