மகனாகிய கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 43: வரிசை 43:
[[arc:ܒܪܐ (ܐܠܗܐ)]]
[[arc:ܒܪܐ (ܐܠܗܐ)]]
[[de:Gott Sohn]]
[[de:Gott Sohn]]
[[en:God the Son]]
[[es:Dios Hijo]]
[[es:Dios Hijo]]
[[fr:Dieu le Fils]]
[[fr:Dieu le Fils]]

07:13, 19 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மகனாகிய கடவுள்

மகனாகிய கடவுள் என்னும் பட்டம், இயேசு கிறிஸ்துவுக்கு கிறித்தவ மதப்பிரிவினரால் தரப்படும் அடையாளம் ஆகும். தந்தையாகிய கடவுள் தனது ஒரே மகனை அனுப்பி உலகத்தை பாவங்களில் இருந்து மீட்டார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.[1]

கிறிஸ்தவ இறையியல்

இறைமகன் அல்லது மகனாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆள் (நபர்) ஆவார். இறைத்தந்தையால் பிறப்பிக்கப்படும் நித்திய (முடிவில்லாத) வார்த்தையாக இருப்பதால் இவர் மகன் என்று அழைக்கப்படுகிறார். விண்ணகம், மண்ணகம், நாம் காண்பவை, காணாதவை அனைத்தையும் தந்தையாகிய கடவுள் இவர் வழியாகவே படைத்தார்; அனைத்தும் இவருக்காகவே படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்; தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே, மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்; அங்கிருந்து வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட மகிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; இவரது அரசுக்கு முடிவே இராது.[2]

பழைய ஏற்பாட்டில்

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார். (தொடக்க நூல் 1:1) என்று விவிலியத்தின் முதல் வாக்கியமே கூறுகிறது.

கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதியாக, பின்வரும் செய்தி காணப்படுகிறது: "நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்." (தொடக்க நூல் 22:17-18)

கடவுள் தனது மறைபொருளான பெயரை, யாவே அல்லது இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே (விடுதலைப் பயணம் 3:14) என்று வெளிப்படுத்தி இருக்கிறார்.

பழைய ஏற்பாடு ஆண்டவரின் இரக்கத்தையும் நீதியையும் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்: பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்." (விடுதலைப் பயணம் 34:6-7)

புதிய ஏற்பாட்டில்

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம்." (2 கொரிந்தியர் 1:3)

"பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்." (எபிரேயர் 1:1-2)

"உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை." (யோவான் 3:17-18) என்று புதிய ஏற்பாடு கூறுகிறது.

"நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்." (எபேசியர் 1:3-4)

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Christian theology வார்ப்புரு:Christianityfooter

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகனாகிய_கடவுள்&oldid=877219" இலிருந்து மீள்விக்கப்பட்டது