வின்டோசு லைவ் மெசஞ்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிஇணைப்பு: mr:विंडोज लाइव्ह संदेशवाहक
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: sr:Vindous lajv mesendžer
வரிசை 105: வரிசை 105:
[[sk:Windows Live Messenger]]
[[sk:Windows Live Messenger]]
[[sq:Windows Live Messenger]]
[[sq:Windows Live Messenger]]
[[sr:Windows Live Messenger]]
[[sr:Vindous lajv mesendžer]]
[[sv:Windows Live Messenger]]
[[sv:Windows Live Messenger]]
[[th:วินโดวส์ไลฟ์ เมสเซนเจอร์]]
[[th:วินโดวส์ไลฟ์ เมสเซนเจอร์]]

11:50, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

வின்டோஸ் லைவ் மெசன்ஜர்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு8.1.0178 / 30 ஜனவரி 2007
இயக்கு முறைமைவிண்டோஸ் XP அல்லது அதற்கு மேம்பட்ட இயங்குதளம் மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360
மென்பொருள் வகைமைதூதுவன் கிளையண்ட்
உரிமம்இலவச மென்பொருள்
இணையத்தளம்http://messenger.live.com

முன்னாளில் MSN மெசன்ஜரின் வழிவந்ததே இலவசமான இணைய உரையாடல் மென்பொருளே விண்டோஸ் லைவ் மெசன்ஜர் ஆகும் இது இன்றளவும் பெரும்பாலனவர்களால் பழைய எம் எஸ் என் மெசன்ஜர் என்றே அழைக்கப்படுகின்றது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2003 சேவர், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் மொபைல் இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இதன் முதற் பதிப்பானது மைக்ரோசாப்டினால் 15 டிசெம்பர், 2005 இல் வெளிவிடப்பட்டது (எம் எஸ் என் மெசன்ஜரின் முதற்பதிப்பு 22 ஜூலை 1999 வெளிவிடப்பட்டது). விண்டோஸ் லைவ் இணைய சேவைகளில் ஒன்றான இதன் தற்போதயை பதிப்பானது 19 ஜூன் 2006 வெளிவிடப்பட்டது. பெரும்பாலான பாவனையாளர்களினால் இன்றும் இது MSN மெசன்ஜர் என்றழைக்கப் படுகின்றது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாட்டின் சில பாகங்களில் இவை மெசன்ஜர் என்றழைக்கப்படுகின்றது.

12 ஜூலை 2006 முதல் யாகூ! மெசன்ஜர் வலையமைப்புடன் கூட்டிணைந்து இயங்க ஆரம்பித்துள்ளது.


வசதிகள்

கோப்புறைகளைப் (folders) பகிர்தல்

கோபுறைகளைப் பகிரும்போது பாதுகாக்கத் தனியான இலவசமான வைரஸ் எதிர்ப்பு நிரல் ஒன்றும் இணைக்கபட்டுள்ளது. கோப்புறைகளைப் பகிர்வதற்கு விண்டோஸ் 2000/xp/விஸ்டா இயங்கு தளங்களுடன் கணிகளின் வன்வட்டானது (ஹாட்டிஸ்க் - harddisk) NTFS கோப்புமுறையில் format பண்ணப் பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் FAT 32 முறையிலுள்ளவற்றிற்கு NTFS முறைக்கு மாற்றுவதற்கு

  • convert x: /fs:ntfs இங்கு x: ஆனது C: அல்லது d: ..

கணினியில் இருந்து தொலைபேசிக்கான அழைப்புக்கள்

கணினியில் இருந்து கணினிக்கான தொலைபேசி அழைப்புகளை மாத்திரமன்றி தொலை பேசி அழைப்புகளை நிமிடத்திற்கு இலங்கை ரூபா 2-3 அளவில் (அமெரிக்க டாலர் 0.02 - 0.03) அளவில் ஓர் நிமிடத்திற்கு அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு மேற்கொள்ள இயலும்.

விண்டொஸ் லைவ் மெசன்ஜர் யாகூ! மெசன்ஜர் கூட்டிணைவு

13 ஜூலை 2006 அன்றிலிந்து இரு பெரும் தூதுவர் வலையமைப்பானது ஒன்றாக இயங்க ஆரம்பித்துள்ளன. அதாவது விண்டோஸ் லைவ் மெசன்ஜர் ஆனது யாகூ! மெசன்ஜரின் பதிப்பு 8 இன் வெள்ளோட்டப் பதிப்பில் (பீட்டா -Beta) இலிருந்து சாத்தியமாகுமெனினும் இறுதிப்பதிப்பே விரும்பப்படுகின்றது. இதற்கு http://www.ideas.live.com/ சென்று உங்கள் MSN/விண்டோஸ் மெசன்ஜர் id ஊடாக உட்புகுந்து பின்னர் அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லது நீங்கள் யாகூ! மெசன்ஜரூடாக வருவதானால் http://messenger.yahoo.com/ சென்று பதிப்பு அங்கு யாகூவின் உரிம ஒப்பந்த்தை வாசித்து ஏற்றுக் கொள்ளவேண்டும். உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஓர் மெசன்ஜரில் இருந்து இருவலையமைப்பில் உள்ளவ்ர்களுடன் உரையாடமுடியும். யாகூ! மெசன்ஜரில் தமிழில் ஒருங்குறியில் நேரடியாக தட்டச்சுச் செய்ய யாகூ! தமிழ்ப் பொருத்து மூலமாக யாகூ! மெசன்ஜரிலிருந்து யாகூ! மற்றும் மற்றும் மைக்ரோசாப்ட் வலையமைப்புகளுடன் ஒருங்குறியில் உரையாடமுடியும்.

வேறு மாற்றங்கள்

  • யாகூ! மெசன்ஜர் போலவே பயனர் ஒருவர் இணைப்பொன்றில்லாதாகக் காட்டிக்கொண்டே உரையாடலில் ஈடுபடலாம்.
  • யாகூ! மெசன்ஜர் போலவே இணைப்பொன்றிலில்லாத ஒருவரிற்கு செய்திகள் அனுப்பலாம் பின்னர் அவர் இணைப்பைப் பெறும் போது செய்திகளைப் பெறுவார்.
  • பட்டப்பெயர்களைச் சூட்டி மாறுபட்ட தொடர்பிலுள்ள பெயரல்லாத பெயரைச் சூட்டி உரையாடலில் ஈடுபடலாம்.
  • உரையாடலில் ஈடுபடுவர் ஒன்றிற்கு மேற்பட்ட வரிகளை தட்டச்சுச் செய்து மீண்டும் தட்டச்சுச் செய்தால் அவை ஒரே செய்தியாகவே காட்சியளிக்கும்.
  • உரையாடலில் நேர முத்திரைகளை இடமுடியும் (Tools ->Options ->Messages->Show time stamp)
  • நிறத்தூரிகை மூலமாக நிறங்களை விரும்பியபடி மாற்றியமைக்கலாம்.
  • மைக்ரோசாப்ட் பாஸ்போட்டானது விண்டோஸ் லைவ் id மூலமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
  • தொடர்பினுள்ளேயே தேடல்கள்

போட்டிகள்

அமெரிக்கா ஆன்லைன் மெசன்ஜர் (AIM) மற்றும் ஜபர் தொழில் நுட்பத்தில் அமைந்த தூதுவர் வலையமைப்புகளே பெரும் போட்டியாக அமைகின்றன. யாகூ மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய தூதுவர் வலையமைக் கொண்டுள்ளன.

விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பாவனையாளர்கள் கெயிம் ஊடாக பல்வேறு பட்ட தூதுவர் வலையமைப்புகளுடன் உரையாடலை நிகழ்த்த இயலும்.

கூகிள் நிறுவனமானது கூகிள் டாக் எனும் திறந்த தூதுவர் வலையமைக் கொண்டுள்ளதுடன் கூகிள் தனது சொந்த உரையாடல் மென்பொருளை மாத்திரம் அல்லாது ஏனைய மென்பொருட்களும் இணைவதையே கூகிள் விரும்புகின்றது.

எதிரான கருத்துக்கள்

கெயிம் போன்றல்லாது விண்டோஸ் லைவ் மெசன்ஜர் விளம்பரங்களைக் காட்டுகினறது.

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோசு_லைவ்_மெசஞ்சர்&oldid=840409" இலிருந்து மீள்விக்கப்பட்டது