"ஒலியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,501 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
கேட்டல், விலங்கு உலகில், வாழ்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களுள் ஒன்று. அத்தோடு ஒலியை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, மனிதகுல வளர்ச்சியினதும், மனிதப் பண்பாட்டினதும் சிறப்பியல்புகளுள் ஒன்று. இதனால், ஒலியியலானது [[இசை]], [[மருத்துவம்]], [[கட்டிடக்கலை]], [[கைத்தொழில் உற்பத்தி]], [[போர்]] போன்ற பல துறைகளிலும் பரவலாக ஊடுருவியுள்ளது.
 
==ஒலியியலின் அடிப்படைக் கருத்துருக்கள்==
ஒலியியல் பற்றிய ஆய்வுகள் பொறிமுறை அலைகளின் அல்லது அதிர்வுகளின் பிறப்பு, அவற்றின் பரவுகை, அவற்றைப் பெறுதல் ஆகியவை தொடர்பானவையாகவே உள்ளன.
 
::[[File:Cause-effect diagram for acoustics-ta.png|med| அடிப்படையான ஒலியியல் வழிமுறை]]
மேலுள்ள படம் ஒலியியல் நிகழ்வு அல்லது வழிமுறை ஒன்றின் படிமுறைகளைக் காட்டுகிறது. ஒலியியல் நிகழ்வொன்றுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். இது இயற்கையானதாக அல்லது முனைந்து நிகழ்த்தப்படுவதாக இருக்கலாம். அதுபோலவே, ஏதோ ஒரு வடிவிலான ஆற்றலை ஒலியாற்றலாக மாற்றி ஒலியலைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/603531" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி