புதுநிலவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]
[[ File:Lunar libration with phase2.gif|190px|{{PAGENAME}}த் தோற்றம்|thumb|right]]


'''புதுநிலவு''' அல்லது '''அமாவாசை''' என்பது [[நிலா|நிலவின்]] முதல் கலை ஆகும். [[வானியல்|வானியல்படி]] [[புவி|புவிக்கும்]], [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் நிலவு வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
'''புதுநிலவு''' அல்லது '''அமாவாசை''' என்பது [[நிலா|நிலவின்]] [[நிலவின் கலை|முதல் கலை]] ஆகும். [[வானியல்|வானியல்படி]] [[புவி|புவிக்கும்]], [[சூரியன்|கதிரவனுக்கும்]] இடையில் நிலவு வரும் நாளே புதுநிலவு ஆகும்.<ref>{{cite book | first = Jean | last = Meeus | title = Astronomical Algorithms | publisher = Willmann-Bell | year = 1991 | isbn = 0-943396-35-2}}
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் புதுநிலவு நாளில் இருளாக இருக்கும்.
</ref> இந்நாளில் [[சூரிய ஒளி|கதிரவ ஒளியானது]] புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் புதுநிலவு நாளில் இருளாக இருக்கும்.



14:39, 11 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

புதுநிலவுத் தோற்றம்

புதுநிலவு அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி புவிக்கும், கதிரவனுக்கும் இடையில் நிலவு வரும் நாளே புதுநிலவு ஆகும்.[1] இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் புதுநிலவு நாளில் இருளாக இருக்கும்.

புதுநிலவு கதிரவனுடன் ஒரே நேரத்தில் உதித்து மறைந்து விடுவதால் அதை வெறும் கண்களால் காண்பது சாத்தியமற்றதாகும். எனினும் முழுக் கதிரவ மறைப்பு நிகழ்வின் உச்ச நிலையின் போது மட்டுமே புதுநிலவை வெறும் கண்களால் காண இயலும்.[2]

நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து பாகைகள் அளவுக்கு சாய்வாக இருக்கிறது. ஆகவே புதுநிலவு நாளன்று நிலவு பெரும்பாலும் புவியின் மீது பதியும் கதிரவ ஒளியைத் தொடாமல் அதற்கு மேலேயோ அல்லது கீழேயோ கடந்து சென்றுவிடும். சில நேரங்களில் அந்த ஒளியை நிலவு கடந்து செல்லும் போது கதிரவ மறைப்பு நிகழும்.

சந்திரமானம் எனப்படும் நிலவை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் புதுநிலவு நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.

புதுநிலவு வரும் நாள் கணிப்பு

ஒரு முழுச்சுற்றின் போதுள்ள நிலவின் கலைகள்

இரண்டு புதுநிலவுகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக்காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. புதுநிலவின் போது நிலவும், கதிரவனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது.

d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2

இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் புதுநிலவன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு நிலவு மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d 2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த புதுநிலவு வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.

இந்து சமயத்தில் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரம்

  1. Meeus, Jean (1991). Astronomical Algorithms. Willmann-Bell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-943396-35-2. 
  2. "புது நிலவு (ஆங்கிலத்தில்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுநிலவு&oldid=2599648" இலிருந்து மீள்விக்கப்பட்டது