கலியுககாலம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
சி →‎வெளி இணைப்பு: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 15: வரிசை 15:
* [http://ksbcreations5.blogspot.com/2010_10_01_archive.html கலியுக்காலம் - ஒரு மொழிமாற்றுப்படம் - கட்டுரை - கே.எஸ்.பாலச்சந்திரன்]
* [http://ksbcreations5.blogspot.com/2010_10_01_archive.html கலியுக்காலம் - ஒரு மொழிமாற்றுப்படம் - கட்டுரை - கே.எஸ்.பாலச்சந்திரன்]


[[பகுப்பு:ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிங்கள மொழிமாற்றத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிங்கள மொழிமாற்றத் திரைப்படங்கள்]]

01:24, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்

கலியுககாலம் 1975 இல் ரி. அர்ஜுனா என்ற தமிழ் இயக்குனரால் இயக்கித் தயாரிக்கப்பட்ட கலியுக காலே என்ற சிங்களத் திரைப்படத்தின் சமகாலத்தில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இலங்கைத் திரைப்படமாகும்.

சிங்கள நடிகர்களான டோனி ரணசிங்க, நீட்டா பெர்னாண்டோ, ஆங்கில வானொலி அறிவிப்பாளர் விஜெய் கொரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தின் தமிழ் வசனங்களை கே. எம். வாசகர் எழுதினார்.

ஜோக்கிம் பெர்னாண்டோ, விஜயாள் பீற்றர், சுப்புலட்சுமி காசிநாதன், ரி. ராஜகோபால், கே. எஸ். பாலச்சந்திரன், எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன் முதலிய பிரபல இலங்கை வானொலிக் கலைஞர்கள் குரல் கொடுத்தார்கள்.

தமிழ்த்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர், தற்போது டென்மார்க்கில் வாழும் சண் என்ற இசையமைப்பாளராவார்.

குறிப்பு

  • சுஜாதா அத்தனாயக்க பாடி, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அன்புள்ளம் ஒன்று சேர்ந்த நல்ல நாள் என்ற பாடல் அக்காலத்தில் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பிரபலமான பாடலாகும்
  • ஈழத்துப்பாடகர் அமுதன் அண்ணாமலையும், பிரபல பாடகர் எம்.பி.பரமேஸும் தங்கள் முதல் திரைப்பாடல்களை இந்த்தப்படத்திலேயே பாடியுள்ளார்கள்.
  • சிங்களத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே தமிழ்ப்படம் வெளிவந்துவிட்டது.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலியுககாலம்_(திரைப்படம்)&oldid=2583171" இலிருந்து மீள்விக்கப்பட்டது