உற்பத்தி வாயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Producer gas" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
வரிசை 8: வரிசை 8:


== மேலும் காண்க ==
== மேலும் காண்க ==
* [[எரிவளி]]
<br>
<br>
<br>
* <br>
* Wood gas
* [[எரிவளி|Fuel gas]]
* Gasification
* Gasifier
* History of manufactured gas
* Pyrolysis


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

17:52, 10 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

நிலக்கரி போன்ற பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு எரிவாயுவாகும். இயற்கை வாயுவுக்கு எதிரான எரிவாயுவாகும். இந்த வகையில் இது மற்ற உற்பத்தி செய்யப்பட்ட வாயுக்களான நிலக்கரி வாயு, நீர் வாயு, கற்கரி அடுப்பு வாயு, கார்பனேற்றப்பட்ட நீர் வாயு போன்றவற்றோடு ஒத்ததாக உள்ளது. உற்பத்தி வாயுவானது, முதன்மையாக, இரும்பு மற்றும் எஃகு உற்பத்திக்கான தொழில்துறை எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது, அதாவது கற்கரி அடுப்புகள் மற்றும் ஊது உலைகள், சிமென்ட் மற்றும் சுட்டாங்கற் சூளைகள் மற்றும் வாயு இயந்திரங்கள் மூலம் இயந்திர சக்தி உற்பத்தி போன்றவற்றிற்காகப் பயன்படுகிறது. இது மிகக் குறைவான வெப்பமூட்டும் மதிப்பினைக் கொண்டிருப்பினும், இதனை மிக மலிவான முறையில் உற்பத்தி செய்ய இயலும். எனவே, அதிக அளவில் இநத எரிவாயுவை உற்பத்தி செய்து எரிதலுக்குப் பயன்படுத்தலாம்.

அமெரிக்காவில், உற்பத்தி வாயுவானது மர வாயுவிலிருந்து ஒரு வளிமமாக்கியின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு மகிழ்வுந்துகளை இயக்கப் பயன்படுகிறது. உண்மையில், நுகர்வோருக்காக தயாரிக்கப்படும் தொகுப்பு முறை உற்பத்தி வாயுவானது, நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வாயுவானது பல்வேறு வேதிப்பொருட்களின் தயாரிப்பிற்கான இடைவினைப் பொருளாகவும், எரிபொருள் மூலமாகவும் பயன்படுகிறது.

ஐக்கிய ராச்சியத்தில், உற்பத்தி வாயுவானது உறிஞ்சும் வாயு என்றும் அழைக்கப்படுகிறது, குறிப்பாக கற்கரி, ஆந்த்ரசைட்டு அல்லது பிற கரிம எரிபொருட்கள் போன்றவற்றில் இருந்து உருவாக்கப்பட்ட எரிபொருள் வாயுவாகும். காற்றானது, செஞ்கூடான கரிம எரிபொருள் மீது செலுத்தப்படும் போது கார்பன் மோனாக்ஸைடு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வினையானது வெப்ப உமிழ் வினையாகும். இது பின்வருமாறு நிகழ்கிறது:

2C + O2 + 3.73 N2 → 2CO+ 3.73 N2

காற்றில் உள்ள நைட்ரசன் மாற்றமேதும் நிகழாமல் இருந்து வாயுவின் செறிவைக் குறைத்து மிகக் குறைவான எரிவெப்ப மதிப்பைத் தருகிறது. மிகவும் உன்னத நிலை உற்பத்தி வாயுவில் 34.7% கார்பன் மோனாக்சைடும் மற்றும் 65.3% நைட்ரசனும் கலந்திருக்கும்.[1] வாயுவானது தார் போன்றவற்றை நீக்குவதற்காக வளிமக் கழுவுதலுக்குட்படுத்தப்பட்ட பிறகு, சக்தியை உற்பத்தி செய்யும் விசைச்சுழலிகளை இயக்கவும், இயந்திரங்களை எரியூட்டித் தொடங்கப் பயன்படும் தீப்பொறிகளை உருவாக்கவும் அல்லது  டீசல் உள்ளெரி இயந்திரங்களை இயக்கவும் ( 15% முதல் 40% வரை அசல் டீசல் எரிபொருளானது இயந்திரங்களில் எரியூட்டுத் தேவைகளுக்கே இன்னும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.[2]). இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தில் வணிகரீதியான வாகனங்கள், குறிப்பாக பேருந்துகளைப் பின் தொடர்ந்து வரும் வண்டிகளின் வடிவில் கலங்கள் நிறுவப்பட்டன. இக்கலங்கள் பெட்ரோல் போன்ற எரிபொருட்களை பதிலியிடத்தக்க எரிவாயுக்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டவையாகும். [3] இக்கலங்களானவை ஆந்த்ரசைட்டால் முழுமையாக நிரப்பப்படும் போது 80 மைல்கள் தொலைவைக் கடக்க முடிந்தது.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. W. J. Atkinson Butterfield, "The Chemistry of Gas Manufacture, Volume 1.
  2. http://www.claverton-energy.com/download/135/
  3. Staff (16 July 1941). "Producer gas for transport". Parliamentary Debates. Hansard. பார்க்கப்பட்ட நாள் 15 November 2008.
  4. Taylor, Sheila (2001). The Moving Metropolis. London: Calmann and King. பக். 258. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85669-241-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்தி_வாயு&oldid=2414500" இலிருந்து மீள்விக்கப்பட்டது