பிக்கோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Kanags பக்கம் பிக்கோ மீட்டர்-ஐ பிக்கோமீட்டர்க்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:47, 20 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பிக்கோ மீட்டர் (picometre, பிமீ, pm) என்பது ஒரு மீட்டரின் ஒரு டிரில்லியனில் ஒரு பங்கு. அதாவது 1/1,000,000,000,000 மீட்டர். இது SI முன்னொட்டு கொண்ட அளவு. அறிவியல் குறியீட்டு முறைப்படி 1×10−12 மீ என்றும் பொறியியல் குறியீட்டு முறைப்படி 1 E-12 மீ என்றும் எழுதலாம்.

இவ் அளவு, மைக்ரோ மீட்டர் என்னும் அளவில் மில்லியனில் ஒரு பங்கு ஆகும். ஆங்சிட்ரோம் (Ångström) என்னும் அளவோடு ஒப்பிடும் பொழுது பிக்கோ மீட்டர் என்பது ஆங்சிட்ரோமின் நூற்றில் ஒரு பங்கு ஆகும். ஆனால் ஆங்சிட்ரோம் என்பது SI ஒப்புதல் பெற்ற நீள அளவு அல்ல.

பிக்கோ மீட்டர் என்னும் அளவு மிகவும் சிறியதாகையால், பெரும்பாலும் அணுவின் உட்கூறாகிய துகள்களின் அளவுகளைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்படுகின்றது. பொதுவாக ஓர் அணுவின் ஆரம் 25 முதல் 260 பிக்கோ மீட்டர் வரை இருக்கும். எடுத்துக்காட்டாக தங்க அணுவின் ஆரம் 135 பிக்கோ மீட்டர் ஆகும், ஆனால் ஈலியம் அணுவின் விட்டம் 32 பிக்கோ மீட்டர் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கோமீட்டர்&oldid=1866895" இலிருந்து மீள்விக்கப்பட்டது