ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|de}} →
 
வரிசை 16: வரிசை 16:
}}
}}

'''ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்''' (Hermitage Museum) என்பது, [[உருசியா]]வின், [[சென். பீட்டர்சுபர்க்]] நகரில் அமைந்துள்ள கலைக்கும் [[பண்பாடு|பண்பாட்டுக்குமான]] [[அருங்காட்சியகம்]] ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, [[பேரரசி கத்தரீன்|பேரரசி கத்தரீனால்]] 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த [[அரும்பொருட்கள்|அரும்பொருட்]] சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று [[மில்லியன்]]கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள் உலகின் மிகப்பெரிய [[ஓவியம்|ஓவியச்]] சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம் ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் என்பன உள்ளடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனை எம்பாங்க்மென்ட் சாலை ஓரமாக அமைந்துள்ள இக்கட்டிடத் தொகுதியுள் உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான [[மாரிகால அரண்மனை]]யும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் உருசிய மத்திய அரசின் சொத்து ஆகும்.

இங்கே உண்ணாட்டினருக்குக் குறைந்த [[நுழைவுக் கட்டணம்|நுழைவுக் கட்டணமும்]], வெளிநாட்டினருக்குப் பல மடங்கு கூடுதலான நுழைவுக் கட்டணமும் பெறப்படுகின்றது. எனினும் எல்லோரும் மாதத்தில் ஒரு நாள், அஃதாவது முதல் வியாழக்கிழமை இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். [[மாணவர்]]களுக்கும், [[குழந்தை]]களுக்கும் கட்டணம் அறவிடப்படுவது இல்லை. திங்கட்கிழமைகளில் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளாகும்.

வரிசை 25: வரிசை 25:

[[பகுப்பு:உருசியாவிலுள்ள அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:உருசியாவிலுள்ள அருங்காட்சியகங்கள்]]

{{Link FA|de}}

19:30, 26 மார்ச்சு 2015 இல் கடைசித் திருத்தம்

அரச ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்
அருங்காட்சியக நுழைவாயில்
Map
நிறுவப்பட்டது1764
அமைவிடம்38 அரண்மனை எம்பாங்க்மென்ட், செயின்ட் பீட்டர்சுபர்க், உருசியா
இயக்குனர்மிக்கைல் பியோட்ர்ரொவ்சுக்கி
வலைத்தளம்www.hermitagemuseum.org

ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் (Hermitage Museum) என்பது, உருசியாவின், சென். பீட்டர்சுபர்க் நகரில் அமைந்துள்ள கலைக்கும் பண்பாட்டுக்குமான அருங்காட்சியகம் ஆகும். உலகின் மிகப் பழையனவும், பெரியனவுமான அருங்காட்சியகங்களுள் ஒன்றான இது, பேரரசி கத்தரீனால் 1764 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1852 ஆம் ஆண்டில் மக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது. இங்குள்ள மொத்த அரும்பொருட் சேமிப்புக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மில்லியன்கள் ஆகும். இவற்றுள் மிகச் சிறு பகுதியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சேமிப்புக்களுள் உலகின் மிகப்பெரிய ஓவியச் சேமிப்பும் அடங்கும். இந்த அருங்காட்சியகம் ஆறு வரலாற்றுச் சிறப்புப் பெற்ற கட்டிடங்கள் என்பன உள்ளடங்கிய பெரிய கட்டிடத் தொகுதியில் அடங்கியுள்ளது. அரண்மனை எம்பாங்க்மென்ட் சாலை ஓரமாக அமைந்துள்ள இக்கட்டிடத் தொகுதியுள் உருசியப் பேரரசரின் முன்னைய வதிவிடமான மாரிகால அரண்மனையும் அடங்கும். இந்த அருங்காட்சியகத்துக்கு வெளிநாடுகளிலும் கண்காட்சி மையங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் உருசிய மத்திய அரசின் சொத்து ஆகும்.

இங்கே உண்ணாட்டினருக்குக் குறைந்த நுழைவுக் கட்டணமும், வெளிநாட்டினருக்குப் பல மடங்கு கூடுதலான நுழைவுக் கட்டணமும் பெறப்படுகின்றது. எனினும் எல்லோரும் மாதத்தில் ஒரு நாள், அஃதாவது முதல் வியாழக்கிழமை இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கட்டணம் அறவிடப்படுவது இல்லை. திங்கட்கிழமைகளில் அருங்காட்சியகத்துக்கு விடுமுறை நாளாகும்.

கட்டிடங்கள்[தொகு]

ஏர்மிட்டேச் அருங்காட்சியகத் தொகுதி. இடமிருந்து வலமாக: ஏர்மிட்டேச் அரங்கம் – பழைய ஏர்மிட்டேச் – சிறிய ஏர்மிட்டேச் – மாரிகால அரண்மனை (புதிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச்சுக்குப் பின்னால் உள்ளது).

இந்த அருங்காட்சியகத் தொகுதியில் உள்ள ஆறு கட்டிடங்களுள் மாரிகால அரண்மனை, சிறிய ஏர்மிட்டேச், பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச் ஆகிய நான்கு கட்டிடங்களின் சில பகுதிகள் பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. ஏனைய இரண்டு கட்டிடங்கள் ஏர்மிட்டேச் அரங்கமும், ஒதுக்க இல்லமும் ஆகும். தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம் சிறிய ஏர்மிட்டேச் கட்டிடத்தில் மட்டுமே இயங்கியது. காலப்போக்கில் பழைய ஏர்மிட்டேச், புதிய ஏர்மிட்டேச், மாரிகால அரண்மனை ஆகிய கட்டிடங்களையும் உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் ஏர்மிட்டேச் அருங்காட்சியகம், அரண்மனைச் சதுக்கத்தில் மாரிகால அரண்மனைக்கு முன்னுள்ள பொது ஊழியர் கட்டிடம், மென்சிக்கோவ் அரண்மனை ஆகியவற்றுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.