மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தமிழ்க்குடிமகன்''' தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.
'''தமிழ்க்குடிமகன்''' தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.

==கல்வி==

தொடக்கக் கல்வியைச் சாத்தனூரிலும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் தேவக்கோட்டையிலும் பயின்றார். 1956 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் திருச்சித் தூய வளவனார் கல்லூரியில் கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றார்.
1961 இல் தமிழ் இலக்கியம் பயில சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார். 1983இல்
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்
== குடும்பம் ==
== குடும்பம் ==

[[சிவகங்கை மாவட்டம்]] [[இளையான்குடி]] அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.

வரிசை 11: வரிசை 18:

== அரசியல் ==
== அரசியல் ==

தமிழ்க்குடிமகன் கடந்த [[1989]],[[1996]]-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் [[இளையான்குடி (சட்டமன்றத் தொகுதி)|இளையான்குடி தொகுதியில்]] போட்டியிட்டு [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|சட்டபேரவை உறுப்பினர்]] ஆனார். இதையடுத்து அவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பட்டியல் |தமிழக சட்டபேரவை தலைவராக]] தேர்ந்தெடுக்கப் பட்டார்.

[[1996]] முதல் [[2001]] வரை [[தமிழக அமைச்சரவை|தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் ]] பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.

03:27, 18 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழ்க்குடிமகன் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.

கல்வி

தொடக்கக் கல்வியைச் சாத்தனூரிலும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைக் தேவக்கோட்டையிலும் பயின்றார். 1956 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் திருச்சித் தூய வளவனார் கல்லூரியில் கணிதப் பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றார். 1961 இல் தமிழ் இலக்கியம் பயில சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு முதுகலைப் பட்டம் பெற்றார். 1983இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (1967 முதல் 1977வரை ) என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்

குடும்பம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.

இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார்.

தமிழ்ப்பணி

திருச்சி தூய வளவனார் கல்லூரியில் பயிலும்போது தேவநேயப் பாவாணர் எழுதிய ஒப்பியன் மொழிநூல் என்னும் புத்தகத்தைப் படித்துத் தனித்தமிழ் ஆர்வம் பெற்றார். 1958 இல் பாவாணரின் அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டதால் தம் பெயரை தமிழ்க் குடிமகன் என்று மாற்றிக் கொண்டார்.இரா.இளவரசு போன்ற பிற மாணவத் தோழர்களுடன் இணைந்து தமிழ்ப் பேராயம் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி இலக்கியக் கூட்டங்களை நடத்தினார். பெருஞ்சித்திரனார் நடத்திய தென்மொழி இதழில் துணை ஆசிரியராகவும் கைகாட்டி, அறிவு, தமிழியக்கம் ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். பாவாணர் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பிலும்,அதன் பின்னர் இரா.இளவரசு அரணமுறுவல் போன்றோருடன் இணைந்து தமிழியக்கம் என்னும் அமைப்பிலும் முன்னின்று செயல்பட்டார். தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்தபோது தமிழ்வழிக் கல்வி, கோவில்களில் தமிழ் வழிபாடு, விளம்பரப் பலகைகளில் தமிழ் எனப் பல வழிகளில் பணியாற்றினார்.

அரசியல்

தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார். இதையடுத்து அவர் தமிழக சட்டபேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.

எழுதிய நூல்கள்

  • அந்தமானைப் பாருங்கள்
  • பாவேந்தர் கனவு
  • வாழ்ந்து காட்டுங்கள்
  • காலம் எனும் காட்டாறு
  • பாவேந்தரின் மனிதநேயம்
  • ஐரோப்பியப் பயணம்
  • மனம் கவர்ந்த மலேசியா
  • கலைஞரும் பாவேந்தரும்
  • தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
  • சீன நாடும் சின்ன நாடும்
  • மலேசிய முழக்கம்
  • 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)

உசாத்துணை

வரலாறு படைத்த தமிழறிஞர்கள்-ஆசிரியர் புலவர் த.சுந்தரராசன், மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-600108

http://tamil.oneindia.com/art-culture/essays/2011/01-dr-tamilkudimagan-an-unforgettable-tamil-scholar-aid0091.html

http://tamil.oneindia.com/news/2004/09/22/tamilkudimagan.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._தமிழ்க்குடிமகன்&oldid=1808103" இலிருந்து மீள்விக்கப்பட்டது