"சாக்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,372 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயமே சாக்தம் ஆகும். சக்தியே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என்பது இவர்களின் சமயக் கருத்தாகும். அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.
 
சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.
 
==பிரிவுகள்==
சாக்தர்களில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன.
*வாமாசாரர்கள்,
*தட்சிணசாரர்கள்<ref>முனைவர் சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்.பக்கம்-48</ref>.
 
==வாமாசாரர்கள்==
வாமாசாரர்கள் கெளலிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேதங்கள் கூறும் வழிபாட்டுவிதிகளை பின்பற்றாமல் , தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப விதிகளை உருவாக்கிக் கொள்வர்.
 
==தட்சிணாசாரர்கள்==
இவர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள் அல்லது வைதிகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதத்தினை பின்பற்றுபவர்கள் ஆவர்.சந்தியாவந்தனம் , மூதாதயர்களுக்கு கடன் செலுத்துதல் , வேள்விகள் செய்தல் போன்றவற்றை பின்பறுபவர்கள் ஆவர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==மேலும் படிக்க==
அருள் நிலையம் பதிப்பில் வெளிவந்த இந்தியாவில் சமயங்கள் நூல்.ஆசிரியர்-முனைவர் பெ.சுயம்பு.
 
[[பகுப்பு:இந்து சமயப் பிரிவுகள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1562577" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி