வே. அகிலேசபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

06:14, 24 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

வே. அகிலேசபிள்ளை (1853 - 1910, திருகோணமலை), ஈழத்துப் புலவர்களில் ஒருவர். பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். இராசக்கோன், அழகக்கோன் என்பார் இவரது புதல்வர்கள்.

இயற்றிய நூல்கள்

  • திருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல்
  • திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல்
  • திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல்
  • நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல்
  • திருக்கோணைநாயகர் பதிகம்
  • திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம்
  • திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம் (1923)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல் (1887)
  • வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை முதலியன.
  • திருக்கோணாசல வைபவம்

பதிப்பித்த நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._அகிலேசபிள்ளை&oldid=106811" இலிருந்து மீள்விக்கப்பட்டது