"ஆர்மோனியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
 
==வரலாறு==
[[Image:Traditional harmonium played in manhattan apartment.JPG|right|thumb|250px|தென்னாசியப்தெற்காசியப் பாணியிலான இடத்துக்கிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஆர்மோனியம்]]
பிரெஞ்சு நாட்டவரான [[அலெக்சாண்டர் தெபைன்]] என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://www.harmoniums.com/hist_en.htm | title=History of the reed organ | accessdate=2010-08-06}}</ref> 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய [[தேவாலயம்|தேவாலயங்களில்]] பயன்படுத்தப்பட்ட [[குழாய் ஆர்கன்]]களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால [[ஐரோப்பா|ஐரோப்பிய]] வல்லரசுகளின் [[குடியேற்ற நாடு]]களுக்கும் பரவியது.
 
 
மேலை நாடுகளில் இக்கருவி புகழ் பெற்றிருந்த [[1900]] ஆண்டுக் காலப் பகுதியில், பல்வேறு பாணிகளில் ஆர்மோனியங்கள் உருவாக்கப்பட்டன. எளிமையான அலங்காரங்கள் அற்ற பெட்டிகளுடன் கூடிய ஆர்மோனியங்கள் முதல் பெரிய அளவிலான, அழகூட்டல்களுடன் கூடியவையுமான பெட்டிகளைக் கொண்ட ஆர்மோனியங்கள் வரை உருவாகின. விலை கூடிய ஆர்மோனியங்கள் குழாய் ஆர்கன்களைப் போல் தோன்றுமாறு செய்யப்பட்டன. இதற்காக குழாய் ஆர்கன்களில் உள்ளது போன்ற ஆனால் போலியான குழாய்கள் ஆர்மோனியத்துடன் பொருத்தப்பட்டன. சில வகை ஆர்மோனியங்கள் இரண்டு விசைப்பலகைகளுடன் அமைக்கப்பட்டதுடன், காலால் இயக்கும் விசைப்பலகைகளைக் கொண்ட ஆர்மோனியங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறான ஆர்மோனியங்களின் துருத்திகளை இயக்குவதற்கு ஒரு உதவியாளர் தேவை. சில பிற்கால ஆர்மோனியங்களில் இதற்காக மின் இயக்கிகள் பயன்பட்டன.
 
 
[[Image:Harmoniumfrisia.jpg|thumb|left|200px| 1930 ஆம் ஆண்டில் ஆலந்தில் தயாரிக்கப்பட்ட ஒர் ஆர்மோனியம்]]
1930 களில் மின்னணு ஆர்கன்களின் அறிமுகத்துடன் மேலை நாடுகளில் ஆர்மோனியத்துக்கான வரவேற்புக் குறையத் தொடங்கியது. [[அம்மன்ட் ஆர்கன்]] (''Hammond organ'') எனப்படும் மின் ஆர்கன், குழாய் ஆர்கன்களின் ஒலிப் பண்பைக் கொடுக்கக்கூடியதாக இருந்ததுடன், விலை, அளவு ஆகியவற்றில் ஆர்மோனியத்துடன் ஒப்பிடக் கூடியனவாகவும் இருந்தன. பெருமளவில் ஆர்மோனியத்தைத் தயாரித்து வந்த கடைசி மேல் நாட்டு நிறுவனமான எசுட்டே கம்பனி தனது உற்பத்தியை [[1950]]-களின் நடுப்பகுதியில் நிறுத்திக் கொண்டது. தற்காலத்தில் மேலை நாடுகளிலுள்ள ஆர்மோனியங்கள் பெரும்பாலும் ஆர்வலர்களிடமே உள்ளன. எனினும், [[இந்தியா]] போன்ற [[தென்னாசியா|தென்னாசியதெற்காசிய]] நாடுகளில் ஆர்மோனியம் இன்னும் ஓரளவு பயன்பாட்டில் உள்ளது.
 
 
மேலை நாட்டு அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தென்னாசியதெற்காசிய ஆர்மோனியங்கள் அப்பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப பல மாற்றங்களைப் பெற்றன. தென்னாசியதெற்காசிய இசைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுரங்களை ஒரே நேரத்தில் வாசிக்க வேண்டிய தேவை இல்லாததனால் விசைப்பலகைகளை இயக்க இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் தென்னாசியதெற்காசிய இசைக் கலைஞர்கள் நிலத்தில் இருந்தே நிகழ்ச்சிகளை நடத்துவதால், மேலை நாட்டு ஆர்மோனியங்களில் இருந்ததுபோல் கால்கள் போன்ற கீழ் அமைப்புக்கள் எதுவும் தேவையாக இருக்கவில்லை. துருத்தியும், மறு கையால் இயக்குவதற்கு வசதியாகக் கருவியின் பின்புறத்தில் அமைக்கப்பட்டது.
 
==அமைப்பு==
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1034871" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி