சிரியாவில் பெண்கள்
சிரியாவில் பெண்கள் (Women in Syria) மொத்த மக்கள் தொகையில் 49.4% உள்ளனர்.[1] அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது அவர்கள் சமூக-அரசியல்களிலும் ஈடுபடுகின்றனர். சிரிய உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
வரலாறு
[தொகு]20-ஆம் நூற்றாண்டில் பெண்களின் உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளினால் சிரியாவில் உள்ள பெண்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டது.[2] 1919 ஆம் ஆண்டில் நசிக் அல் அபீது என்பவர் நூர் அல் ஃபயா எனும் பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றையும் அதே பெயரில் பதிப்பகம் ஒன்றையும் நிறுவினார்.மசலூன் போரில் பங்கெடுத்ததற்காக இவருக்கு சிரிய இராணுவத்தின் கௌரவ தளபதி பதவி கொடுக்கப்பட்டது.1922 ஆம் ஆண்டில் சிரியன் ரெட் கிரெசன்ட் எனும் அமைப்பை நிறுவினார்.[3] 1928 இல் லெபனான்-சிரிய பெண்ணியவாதி ,நஸ்ரியா சின் அல் தின் அவர்கள் திருக்குர்ஆனை பெண்ணியவாதிகளின் கண்ணோட்டத்தில் மீள் பொருள்விளக்கம் செய்தார். அதில் ஆண்களைப் போலவே பெண்களையும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.[4]
1963 ஆம் ஆண்டில் பாத் எனும் அரசியல் கட்சி சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த கட்சியானது சிரியாவில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்படுவர் எனவும் வேலைகளிலும் ஆண்களைப் போல பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தது.[5]
1967 ஆம் ஆண்டில் சிரியாவில் உள்ள பெண்கள், சிரிய பெண்கள் நலச் சங்க எனும் நீதிமுறைச் சார்புடைய அரசு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பானது பெண்கள் நலச் சமூகம், கல்வி சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் ஆகியவற்றின் கலவை ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் சிரியாவில் உள்ள பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படுவதை நோக்காகக் கொண்டு செயல்படுவது ஆகும்.[5] 2011 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சிரிய நாடு முழுவதும் மோதல் ஏற்பட்டது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த மோதலில் மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் மற்றும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் போன்றவை சேதமானது. இந்த மோதலில் பெண்களே அதிகமாக இலக்காக வைத்து தாக்கப்பட்டனர். ஆண்களை விட பெண்கள் உடல் வலிமை குறைவாகக் கொண்டிருந்ததினால் அவர்கள் இலக்காக வைக்கப்பட்டனர்.
உரிமைகள்
[தொகு]பெண்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் ஈடுபடுவதற்கு சிரியா சட்டம் வழிவகை செய்கிறது. சட்டப்படி திருமணவயது பெண்களுக்கு பதினேழாகவும் ஆண்களுக்கு பதினெட்டாகவும் உள்ளது. ஆனால் பெண்களுக்கு பதின்மூன்று வயதாக இருக்கும் போதும் அவர்களின் திருமணங்களை நீதிமன்றங்கள் அனுமதிக்கின்றன. திருமண முறிவு சிரியாவில் தனித்தன்மையான சட்டங்களைக் கொண்டுள்ளது. பெண்கள் திருமண முறிவு பெறுவதற்கு அவர்களின் கணவருடைய சம்மதம் தேவைப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் பெண்கள் நேரடியாக நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலமாகவே திருமணமுறிவிற்காக விண்ணப்பிக்க இயலும். இவ்வாறான சூழ்நிலைகளில் அந்தப் பெண்களின் கணவன்கள் தவறுதலாக நடத்தல் அல்லது கனவருக்குரிய கடமைகளில் இருந்து விலகுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். ஆனால் ஒரு ஆண் திருமணமுறிவு பெற வேண்டும் எனில் நேரடியாக நீதிமன்றம் சென்று வாய்மொழியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து கேட்க இயலும் பின் நீதிமன்றம் அவருக்கு திருமண முறிவு வழங்கும்.[6]
கல்வி
[தொகு]சிரிய நாட்டில் 6 வயதில் பள்ளிக்கல்வி துவங்கி பதின்மூன்று வயதில்முடிவடைகிறது. சிரிய பல்கலைக்கழங்களில் ஆண்களும், பெண்களும் ஒரே வகுப்பறையில் கல்வி கற்கின்றனர்.1970 ஆம் ஆண்டுமுதல் 1990 வரை பள்ளிக்கூடங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 100 ஆண்களுக்கு 95 பெண்கள் உள்ளனர். பெரும்பாலான பெண்கள் பள்ளிக்குச் சென்ற போதிலும் இடைநிற்றலில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Syria Population". Syria Population. 7 Apr 2015. http://countrymeters.info/en/Syria.
- ↑ Smith, edited by Bonnie G. (2005). Women's history in global perspective. Urbana, Ill.: University of Illinois Press. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780252029905.
{{cite book}}
:|first=
has generic name (help) - ↑ "Syrian Women Making Change". PBS. 19 July 2012. Archived from the original on 26 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 15 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Keddie, Nikki R. (2007). Women in the Middle East: past and present. Princeton: Princeton University Press. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691128634.
- ↑ 5.0 5.1 Tohidi, ed. by Herbert L. Bodman, Nayereh (1998). Women in muslim societies: diversity within unity. Boulder (Colo.): L. Rienner. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781555875787.
{{cite book}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Legal rights - Syria | Kvinfo.dk". kvinfo.org. Archived from the original on 2021-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-21.