சினாபுங்
சினாபுங் | |
---|---|
Gunung Sinabung | |
1987 இல் சினாபுங் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,460 m (8,070 அடி) |
பட்டியல்கள் | ரைபு |
புவியியல் | |
நிலவியல் | |
பாறையின் வயது | Pleistocene |
மலையின் வகை | stratovolcano |
கடைசி வெடிப்பு | 29 ஆகத்து 2010 |
சினாபுங் (Sinabung, இந்தோனேசியம்: Gunung Sinabung) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திராப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். மெதான் என்ற சுமாத்திராவின் முக்கிய நகரத்தில் இருந்து தென்மேற்கே 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடித்ததற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இது முதற்தடவையாக 2010, ஆகத்து 29 இல் வெடிக்கும் வரை பதியப்பட்டிருக்கவில்லை[1].
2010 வெடிப்பு
[தொகு]இந்த எரிமலை 1600 ஆம் ஆண்டில் இருந்து சீற்றமடையாமல் இருந்து வந்துள்ளது[2]. முதற்தடவையாக இது 2010 ஆகத்து 29 அதிகாலையில் உள்ளூர் நேரப்படி 00:06 மணிக்கு வெடிக்க ஆரம்பித்தது. 1.5 கிமீ உயரத்திற்கு இதன் தூசுகள் வீசப்பட்டன. குழம்புகள் எரிமலைவாயில் வீழ்ந்தன[3].
2010 செப்டம்பர் 3 வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 கிமீ உயரத்திற்கு தூசுகள் கிளம்பின.[4] செப்டம்பர் 7 இல் மீண்டும் வெடித்தது. இதன் சீற்றம் அதிகமானதாக இருந்தது.
2013 வெடிப்பு
[தொகு]2013 செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு சினாபுங் மீண்டும் வெடித்தது. 3,700 பேர் இருப்பிடங்களை விட்டு நகர்ந்தனர்.[5] மீண்டும் 2013 நவம்பர் 5 இல் வெடித்ததில், வானில் 7-கிமீ தூரத்திற்கு தூசுகள் கிளம்பின.
2014 வெடிப்பு
[தொகு]2014 சனவரி 4 இல் மீண்டும் வெடித்தது. 4,000-மீட்டர் உயரத்திற்கு தூசுகள் கிளம்பின.[6] 2014 பெப்ரவரி 1 இல் மீண்டும் வெடித்தது. 14 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[7] இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்பள்ளி மாணவர்கள். இவர்கள் எரிமலையைக் காண வந்திருந்தனர்..[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mount Sinabung in Sumatra erupts". ஜகார்த்தா போஸ்ட்]]. Archived from the original on 2010-08-31. பார்க்கப்பட்ட நாள் 2010-08-29.
- ↑ "Volcano quiet for 400 years erupts in Indonesia". அசோசியேட்டட் பிரஸ். 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-28.
- ↑ "Volcano erupts on Indonesia's Sumatra after 400 years". ராய்ட்டர்ஸ். 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
- ↑ "Thousands flee as Mt. Sinabung erupts". The Jakarta Post. September 15, 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15.
- ↑ "Cloud of Destruction: Mount Sinabung Erupts". Bloomberg News. January 7, 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
- ↑ "Indonesia volcano Sinabung in deadly eruption". பிபிசி. BBC. 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
- ↑ "Volcano Mount Sinabung erupts in North Sumatra, Indonesia". IANS. Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); line feed character in|title=
at position 48 (help)