சித்தமல்லி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தமல்லி அணை தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கார்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வணையில் தேங்கும் நீர் நடுவலூர், இருகையூர், காரைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி, திருபுரந்தான், இடங்கண்ணி, சோழமாதேவி, கார்குடி தெற்கேரி, கோவத்தட்டை ஏரி மற்றும் திருப்புரந்தான் பெரிய ஏரி ஆகிய ஊர்களின் வழியாக ஓடி, அணையின் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்குத் திறந்து விடப்படுகிறது. இது சுமார் 900 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மொத்தக் கொள்ளவு 226.80 மில்லியன் கனஅடியாகும். இந்த அணையின் மூலம் 1179.02 ஏக்கர் நன்செய் நிலமும், 3901.60 ஏக்கர் புன்செய் நிலமும் என 5080.62 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுக்கோட்டை, ed. (28 Dec 2017). சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு! மகிழ்ச்சியில் விவசாயிகள். விகடன் இதழ்.
  2. புதுக்கோட்டை, ed. (நவம்பர் 07, 2019). சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் கலெக்டர் ஆய்வு. தினத்தந்தி நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தமல்லி_அணை&oldid=3760942" இலிருந்து மீள்விக்கப்பட்டது