சிண்டி கோமசு
சிண்டி கோமசு | |
---|---|
பிறப்பிடம் | மிசிசாகா, ஒண்டாரியோ கனடா |
இசை வடிவங்கள் | பரப்பிசை, மின்னணுவியல் நடன இசை, விசுக்கிசை, முதிரகவையர் புத்திசை, இலத்தீன் பரப்பிசை |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், பாடகி-பாடலாசிரியர் |
இசைக்கருவி(கள்) | குரல் |
வெளியீட்டு நிறுவனங்கள் | இண்டர்சுக்கோப்பு இரெக்கோட்சு, இயுனிவேசல் மியூசிக்கு குரூப்பு |
இணைந்த செயற்பாடுகள் | தேவு தெவாட்டு, கிளென் பல்லாடு, மைக்கு பிராடுபோடு, உரோசர் சாஞ்செசு, துவட்டு சற்றுவூடு |
இணையதளம் | cindygomez |
சிண்டி கோமசு (Cindy Gomez) என்பவர் பாடகர், பாடலாசிரியர், நடிகர், உருமாதிரிக் கலைஞர் ஆவார். இவர் ஆங்கிலம், இத்தாலியம், இந்தி, இலத்தீன், எசுப்பானியம், கண்டோனீயம், பிரான்சியம், மண்டரின் ஆகிய எட்டு மொழிகளில் பாடக்கூடியவர்.[1]
வாழ்க்கை
[தொகு]சிண்டி கோமசு எட்டாவது அகவையிலிருந்தே பாடத் தொடங்கி விட்டார். இவர் கனடாவில் இடம்பெற்ற இலத்தீன் அமெரிக்க அழகிப் போட்டியிலும் பட்டம் வென்றார்.[2] இதன் பின்னர் கனேடியத் தேசியக் கண்காட்சி, கனடாவின் உவொண்டலாந்து போன்ற இடங்களில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
2002இல், தெலுத்து இரெக்கோட்சு (Stealth Records) வெளியிட்ட, உரோசர் சாஞ்செசின் இரிலீசு இயுவர்செல்பு-இபிசா 2002 என்ற இசைத்தொகுப்பில் பவுண்டிங்கு இயுவர் சோல் (Pounding Your Soul) என்ற மின்னணுவியல் நடனப் பாடலைச் சிண்டி கோமசு பாடினார்.[3] அதே ஆண்டில், இலெபிட்டு பிகைண்டு II: திரிபுலேசன் போர்சு என்ற திரைப்படத்திலும் நடித்தார்.[4] இது இவர் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும்.
2003இல், துவட்டு சற்றுவூட்டின் இசையில், பிறின்சு ஒவ்வு பேர்சியா: தெ சாண்டுசு ஒவ்வு தைம் என்ற ஆட்டத்திற்காக, தைம் ஒனிலி நோசு (Time Only Knows) என்ற பாடலை இவர் பாடினார். நிகழ்பட ஆட்டங்களில் இடம்பெற்ற ஒரு சிறந்த பாடலாக இது கருதப்படுகின்றது.[5]
இதனையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ma Vie en Vert: Singer Cindy Gomez". Eluxe Magazine. 15 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Anne Kingston (24 செப்டம்பர் 2009). "Cindy Gomez's Cinderella story". Maclean’s. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Roger Sanchez–Release Yourself–Ibiza 2002". Discogs. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Tribulation Force (2002) Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Chris Moore (19 மார்ச் 2012). "The Top 10 Game Ending Songs". GamingExcellence. Archived from the original on 2016-12-17. பார்க்கப்பட்ட நாள் 21 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)