சிங்சிங்பார்
சிங்சிங்பார்
Zingzingbar சிங் சிங் பார் | |
---|---|
முகாம் வழி-நிலையம் | |
ஆள்கூறுகள்: 32°47′31″N 77°19′28″E / 32.7918924°N 77.3245239°E | |
நாடு | இந்தியா |
State | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | இலாகௌல் மற்று இசுபீதி |
ஏற்றம் | 4,270 m (14,010 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 |
சிங்சிங்பார் (Zingzingbar) என்பது எல்லைச் சாலைகள் அமைப்பின் சாலை-கட்டுமான முகாம் ஆகும். மேலும், இம்முகாம் இமாச்சலப் பிரதேசத்தின் இலாகௌல் மற்றும் இசுபீதி மாவட்டத்தில் மணாலி வரையிலான லே சாலையில் உள்ள தர்ச்சாவிலிருந்து 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் அமைந்துள்ள தேயிலை இல்லத்திற்கான வழி-நிலையமும் ஆகும். சுமார் 14,010 அடிகள் (4,270 m) உயரத்தில் சிங்சிங்பார் முகாம் அமைந்துள்ளது . இந்த இடத்தில் தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளன. மலையேறுபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இதை பயன்படுத்தப்படலாம்.[1]
சிங்சிங்பார் என்பது பாரா-லாச்சா-கணவாய் சுரங்கப்பாதையின் முன்மொழியப்பட்ட தெற்கு நுழைவாயிலாகும்.[2] இக்குகைப் பாதை மணாலியில் இருந்து தோராயமாக 125 கிலோமீட்டர்கள் (78 mi) அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் கீலாங் சராய்யில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாதையில் போக்குவரத்து நேரத்தை 2 மணிநேரம் வரை குறைக்கும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Deshmukh, Vivek (2019-10-19). "Day 4—Manali to Leh cycling expedition". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
- ↑ Service, Tribune News. "BRO sets ball rolling for tunnel under Baralacha". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
- ↑ Service, Tribune News. "Road inundated, traffic disrupted on Manali NH". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.