சிங்கம்பட்டி அரண்மனை
சிங்கம்பட்டி அரண்மனை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் சிங்கம்பட்டியில் உள்ள ஒரு அரண்மனை ஆகும்.[1]
சிங்கம்பட்டி அரண்மனை என்பது சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அரண்மனை[2] இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் விரிந்துள்ளது.[3] இந்த அரண்மனையில் சமீன்தார் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். இந்த அரண்மனையில் மன்னராட்சி கால தர்பார் மண்டபம் உள்ளது. இது மன்னரின் வாரிசை பார்க்கவரும் பார்வையாளர்களுக்கான காத்திருப்பு மண்டபமாக இப்போது உள்ளது. சிங்கம்பட்டி ராஜாக்களின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் படங்கள் தர்பார் மண்டபச் சுவர் முழுக்க அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தை, சிங்கம்பட்டி மக்கள் தங்கள் வீட்டு சுபநிகழ்வுகளுக்கு பயன்படுத்திவருகின்றனர்.[4] ஜமீன் வாரீசுகளால், அதன் பாரம்பரியமான சில பொருள்களை இப்போதும் பாதுகாத்து வருகிறனர். அரண்மனையின் ஒரு பகுதியில் இந்த கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது.
- சிகாகோ சென்று திரும்பிய சுவாமி விவேகானந்தர், இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு பரிசளித்த மரத்தாலான யானைச் சிற்பம். (பாஸ்கர சேதுபதி மகாராஜா, சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழிப் பூட்டன் ஆவார். விவேகானந்தரின் அன்புப் பரிசை அவர், தனது பேத்தி வள்ளிமயில் நாச்சியாருக்கு வழங்கினார். வள்ளிமயில் நாச்சியார் சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணமகளாக வந்தபோது, தாத்தா அளித்த பரிசையும் புகுந்த வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்தார்).
- ஜமீன்தாரர் ஆசையோடு வளர்த்த குதிரை ஒன்று இறந்துவிட, அதன் நினைவைப் பாதுகாக்க, அதன் கால் ஒன்றை வெட்டி, அதன் குளம்புக்கு அடியிலும், மேலேயும் வெள்ளிப் பூண் போட்டு மாற்றப்பட்ட சாம்பல் கின்னம்.
- சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து வந்த நெல்லை அளக்கப் பயன்படுத்திய தேக்குமரத்தாலான பெரிய மரக்கால் இந்த மரக்காலை இரண்டு பேர் சேர்ந்தால்தான் தூக்க முடியும். இந்த மரக்கால் சாதாரண மரக்கால் அளவில் 14 மரக்கால் கொள்ளக்கூடியது.
- ஜமீனில் பயன்படுத்திய மூன்று கிலோ எடை உள்ள பூட்டு. இந்தப் பூட்டு இன்றும் நல்ல நிலையில் உள்ளது.
- ஜமீன் பரம்பரை தர்பாரில் பயன்படுத்திய அலங்கார நாற்காலி.
- தர்பார் கூடத்தில் 7 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட கல் மேடை இந்த கல் மேடை, அதன் நான்கு கால்கள் அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. ஜமீன்தாரர்களுக்கு பட்டம் சூட்டும்போது அவர்கள் இந்தக் கல் மேடையில்தான் அமர்ந்திருப்பார்கள்.
- ஜமீன் பரம்பரையினர் வேட்டையாடிக் கொன்ற யானையின் தலை எலும்புக் கூடு ஒன்று.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ சிங்கம்பட்டி ஜமீனும் மாஞ்சோலையும்!
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-04-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
- ↑ சிங்கம்பட்டி ஜமீன்தார் மறைவு: யார் இந்த டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி?, பி.பி.சி, 2020 மே 27
- ↑ என். சுவாமிநாதன் (18 சூலை 2017). "அரண்மனைக்கு ராஜா ஆயுள் காப்பீட்டு முகவர்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2017.
- ↑ "ஜமீன் சிங்கம்பட்டி-2". https://www.thevarthalam.com. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2017.
{{cite web}}
: External link in
(help)[தொடர்பிழந்த இணைப்பு]|publisher=