உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் வான்வழி பறப்பு எண் 006

ஆள்கூறுகள்: 25°04′53″N 121°13′48″E / 25.0815°N 121.2300°E / 25.0815; 121.2300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கபூர் வான்வழி பறப்பு எண் 006
ஏப்ரல் 1999இல் பிராங்க்பர்ட் வானூர்தி நிலைய நிகழ்வில் சிக்கிய வானூர்தி 9V-SPK
நிகழ்வு சுருக்கம்
நாள்அக்டோபர் 31, 2000
சுருக்கம்ஓட்டுநர் பிழை, ஓடுபாதை குழப்பம், வான்பயண கட்டுப்பாடக பிழை, நிலைய ஒளியமைப்புக் குறைபாடு
இடம்சியாங் கை சேக் பன்னாட்டு வானூர்தி நிலையம் (தற்போது தாய்வான் டோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்]])
பயணிகள்159
ஊழியர்20
காயமுற்றோர்71
உயிரிழப்புகள்83
தப்பியவர்கள்96
வானூர்தி வகைபோயிங்கு 747-412
இயக்கம்சிங்கப்பூர் வான்வழி
வானூர்தி பதிவு9V-SPK
பறப்பு புறப்பாடுசிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
கடைசி நிறுத்தம்சியாங் கை சேக் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சேருமிடம்லாசு ஏஞ்செலசு பன்னாட்டு வானூர்தி நிலையம்

சிங்கப்பூர் வான்வழி பறப்பு 006 (SQ006) சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்திலிருந்து லாசு ஏஞ்செலசு பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு தாய்வானின் சியாங் கை சேக் வானூர்தி நிலையம் (தற்போது தாய்வான் டோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்) வழியாக வழமையாக இயக்கப்படுகின்ற ஓர் பயணியர் பறப்பு ஆகும். அக்டோபர் 31, 2000 அன்று 15:17 UTC, தாய்பெய் உள்ளூர் நேரம் 23:17 மணிக்கு இந்தப் பறப்பில் இயங்கிய போயிங்கு 747-412[1] சூறாவளியில் தாய்பெய் வானூர்தி நிலையத்தின் தவறான ஓடுபாதையிலிருந்து மேலெழும்ப முயன்று விபத்துக்குள்ளானது; இந்த விபத்தில் பயணித்த 179 பேரில் 83 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தே சிங்கப்பூர் வான்வழியின் பயணிகள் உயிரிழந்த முதல் விபத்து ஆகும். இந்த வான்வழியின் இதற்கு முன்னதான பயணிகள் உயிரிழந்த விபத்து, தனது கிளை நிறுவனம் சில்க் ஏர் மூலம் இயக்கிய சில்க் ஏர் பறப்பு 185 விபத்துக்குள்ளானதே ஆகும்.[2]

விபத்து

[தொகு]
பசிபிக் பெருங்கடலில் 2000 ஆண்டு சூறாவளி சாங்சேன் பயணித்த வழி

இந்த விபத்தில் சிக்கிய வானூர்தி 9V-SPK என்ற பதிவெண்ணைக் கொண்ட போயிங்கு 747-400 வகை வானூர்தி ஆகும். இது சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்திற்கு சனவரி 21, 1997இல் வழங்கப்பட்டது. இதன் இறுதி பராமரிப்பு ஆய்வு செப்டம்பர் 16, 2000இல் நிகழ்ந்துள்ளது. அப்போது எந்தக் குறைபாடும் இருந்ததாக அறிவிக்கப்படவில்லை.[3]

அக்டோபர் 31, 2000 உள்ளூர் நேரம் 23:00 (15:00 ஒ.அ.நே) மணிக்கு]][4] பசிபிக் பெருங்கடலில் 2000 ஆண்டு வீசிய சாங்சேன் எனப் பெயரிடப்பட்ட சூறாவளியால் ஏற்பட்ட பெருத்த மழையில் 9V-SPK வாயில்தூண் B5ஐ விட்டு [5] புறப்பட்டது. 23:05:57 மணியளவில் சியாங்கே சேக் வானூர்தி நிலையக் கட்டுப்பாட்டகம் ஓடுபாதை 05Lக்கு "தரைவழி சியாரா சியாரா வெஸ்ட் கிராஸ்" மற்றும் "நவம்பர் பாப்பா" வழியே தரைப்பயணம் மேற்கொள்ள அனுமதித்தது.[5] 23:15:22 மணிக்கு நிலையம் ஓடுபாதை 05Lஇல் வானூர்தி மேலெழும்ப ஒப்புதல் அளித்தது.[5] தென் கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் உள்ள பல பயணியர் வானூர்திகள் மோசமான வானிலையில் மேலே செல்வது வழக்கமான ஒன்றுதான்.[6]

ஆறு வினாடி நிறுத்தத்திற்குப் பிறகு 23:16:36 மணிக்கு வானூர் ஒட்டுநர் குழு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓடுபாதை 05Lக்கு மாறாக அதற்கு இணையாக இருந்த ஓடுபாதை 05Rஇல் மேலெழும்ப முயன்றனர். இந்தப் பாதை சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. குழுத் தலைவர் ஃபூங் சீ கொங் மிகச்சரியாக 05Lஇல் மேலேற வேண்டும் என்பதைக் கேட்டிருந்தபோதும் 215 மீட்டர்கள் (705 அடி) முன்னதாகவே திரும்பி 05Rயில் செல்லலானார்.[7] இந்த வானூர்தி நிலையத்தில் தரைநிலை கதிரலைக் கும்பா நிறுவப்படாதமையால் வானூர்திகளின் தரைவழிப் பயணங்களை கண்காணிக்காது இருந்தது.[8]

சியாங்கே சேக் வானூர்தி நிலைய வரைபடமும் SQ006இன் தரைப் பயணவழியும். கோடிட்ட பச்சை கோடு ஓடுபாதை 05Lக்குச் சரியான தரைவழியைக் காட்டுகிறது. The yellow arrow indicates the path to ஓடுபாதை 05Rக்கான தரைவழியை மஞ்சள் அம்புக்குறி காட்டுகிறது.. விபத்திற்குள்ளான பாதையை சிவப்புக் கோடு காட்டுகிறது.

பெருத்த மழையினால் பார்வைத் தெளிவு குறைவானதால் ஓட்டுநர் குழு 05R ஓடுபாதையில் இருந்த கட்டமைப்பு இயந்திரங்களை (இரண்டு ஆழ்தோண்டிகள், இரண்டு அதிரும் கலைவைக்கலன்கள், ஓர் சிறிய நிலச்சமன் பொறி, ஓர் காற்றழுத்தி)[4] கவனிக்கவில்லை. மேலும் ஓடுபாதையில் கற்சரளைத் தடுப்புகளும் குழிகளும் கொண்டதாயிருந்தது.[5] ஏறத்தாழ 41 வினாடிகளுக்குப் பின்னர்,[5] வானூர்தி கட்டமைப்பு இயந்திரங்களுடன் மோதி தூள் தூளானது. விமான உடற்பகுதி இரண்டாகப் பிளந்து பொறிகளும் கீழிறங்கு இயந்திரங்களும் தனியே வீசப்பட்டன.[5] பாரந்தூக்கி ஒன்று வானூர்தியின் இடது பக்கத்தைக் கிழித்தது.[9] மூக்கு பாகம் மற்றொரு இயந்திரத்தில் மாட்டிக் கொண்டது.[10] ஓர் பெரும் தீ பற்றியெழுந்து முன் பகுதி மற்றும் இறக்கைப் பகுதிகளை சூழ்ந்து கொண்டது.[5] 159 பயணியரில் 79 பேரும் 20 ஊழியரில் 4 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பலர் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள்;[4] இறக்கைகளில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருள் வெடித்து அப்பகுதியில் தீப் பற்றியது.[11] 23:17:36மணிக்கு, நெருக்கடி மணி அடிக்கப்பட்டது. 41 தீயணைப்பு ஊர்திகளும் 58 முதலுதவி ஊர்திகளும், 9 வெளிச்சம் தரும் அலகுகளும், 4,336 ஊழியரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விபத்து நடந்த மூன்று நிமிடங்களில் வானூர்தி மீது தீயணைப்பு வேதிப்பொருட்கள் தெளிக்கப்பட்டன.[5] 23:35 மணிக்கு, ஏறத்தாழ விபத்திற்கு 10 நிமிடங்கள் கழித்து, தீ கட்டுப்பாட்டிற்குள் வந்தது.[5] 23:40 மணிக்கு வானூர்தி நிலையத்திற்கு வெளியேயிருந்து முதலுதவி வண்டிகளும் நெருக்கடி வண்டிகளும் வடக்கு வாயிலுக்கு வந்து சேர்ந்தன. நவம்பர் 01, 00:00 தாய்பெய் நேரத்தில், தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. வானூர்தியின் முன்பாகம் முற்றிலும் அழிபட்டது. ஓர் தற்காலிக கட்டுப்பாட்டு அறையை நிறுவினர்.[5]

சீனா வான்வழி பறப்பு 004இல் பயணித்த பயணி ஒருவர் சிங்கப்பூர் வான்வழி பறப்பு 006 தீப்பற்றி எரிவதை ஒளிதமாக படம் பிடித்தார்.[12]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "ASN Aircraft accident Boeing 747-412 9V-SPK Taipei-Chiang Kai Shek Airport (TPE)". Aviation-safety.net. Archived from the original on 2011-08-06. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
 2. "Crash tarnishes clean record." பிபிசி. Wednesday 1 November 2000. Retrieved on 10 June 2009.
 3. "Boeing's workhorse." பிபிசி. செவ்வாய் 31 அப்டோபர் 2000. பெறப்பட்டது 10 சூன் 2009.
 4. 4.0 4.1 4.2 "Aircraft Accident Report ASC-AAR-02-04-001 பரணிடப்பட்டது 2007-11-28 at the வந்தவழி இயந்திரம்: Crashed on a partially closed runway during takeoff Singapore Airlines Flight 006 Boeing 747-400, 9V-SPK CKS Airport, Taoyuan, Taiwan 31 October 2000," Aviation Safety Council, Taiwan, Republic of China
 5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 "Fate of SQ006." Channel News Asia. Retrieved on 10 June 2009.
 6. Gittings, John. "100 feared dead in air disaster," தி கார்டியன். Wednesday 1 November 2000. Retrieved on 10 June 2009.
 7. "Last seconds of doomed airliner." பிபிசி. Friday 3 November 2000. Retrieved on 10 June 2009.
 8. "SQ Special Part One - Tragedy in Taipei." Channel News Asia. 4 November 2000. Retrieved on 10 June 2009.
 9. Braid, Mary. "How to survive an air crash." thisislondon.co.uk. 17 February 2003. Retrieved on 10 June 2009.
 10. "Failure To Minimize Latent Hazards Cited In Taipei Tragedy Report." Air Safety Week. 6 May 2002. Retrieved on 10 June 2009.
 11. Roderick, Daffyd. "Fatal Error பரணிடப்பட்டது 2007-10-19 at the வந்தவழி இயந்திரம்." TIME Asia. 13 November 2000. Volume 156, No. 19. Retrieved on 10 June 2009.
 12. "SQ006 Accident Investigation Factual Data Collection Group Report பரணிடப்பட்டது 2013-04-04 at the வந்தவழி இயந்திரம்," Aviation Safety Council, Taiwan, Republic of China, 30 of 38

வெளி இணைப்புகள்

[தொகு]
நிகழ்வாய்வு அறிக்கைகள்
சிங்கப்பூர் வான்வழியின் பத்திரிகை அறிக்கைகள்
நீதிமன்ற ஆவணங்கள்
ஓட்டுநர் அறை பேச்சுப்பதிவு தரவுகள்
செய்தி மற்றும் ஊடக கட்டுரைகள்
பிற இணைப்புகள்