சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில்

சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் (மலையாளம்: ശാസ്താംകോട്ട ശ്രീ ധര്‍മ്മശാസ്താ ക്ഷേത്രം, [sasthamcotta Dharmasastha Temple] error: {{lang-xx}}: text has italic markup (உதவி)) என்பது கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். பரசுராமரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படும் 12 முக்கிய ஐயப்பன் கோவில்களில் ஒன்று [1].


இந்தக் கோவில் அமைந்துள்ள சாஸ்தாம்கோட்டை பகுதியின் மூன்று புறங்களும் கேரளாவில் உள்ள மிகப் பெரிய ஏரியான சாஸ்தாம்கோட்டை ஏரியால் சூழப்பட்டுள்ளது. இக்கோவிலைச் சுற்றி ஏராளமான குரங்குகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.

தொன்ம நம்பிக்கை[தொகு]

இக்கோவில் இராமாயணம் எழுதப்பட்ட காலகட்டம் வரையில் பழமை வாய்ந்தது என்றும் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் வானரப்படையுடன் அயோத்திக்குத் திரும்பும் வழியில் இங்கு வந்து ஐயப்பனை (தரும சாஸ்தாவை) வணங்கியதாக தொன்ம நம்பிக்கை உள்ளது. இங்குள்ள ஏரிக்கரையில் ராமர் பித்ரு தர்ப்பணம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ராமரின் வானரப்படைத் தலைவர் நீலன் என்ற குரங்கை ஐயப்ப சேவைக்காக சாஸ்தாம்கோட்டையில் விட்டுச் சென்றதாகவும், நீலனின் பரம்பரையில் உள்ள குரங்குகள் தான் இன்று அங்கு காணப்படுகின்றன என்பதும் இங்குள்ளவர்களின் தொன்ம நம்பிக்கை.


திருவிழாக்கள்[தொகு]

பிப்ரவரி - மார்ச்சு மாத கால அளவில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் பத்தாவது நாள் நடைபெறும் கெட்டு காழ்ச்சா என்ற வழிபாட்டின்போது மாடு, குதிரை, அலங்காரம் செய்யப்பட்ட தேர் போன்ற உருவ பொம்மைகள் தயாரிக்கப்பட்டு ஊர்வலம் செல்வது வழக்கம். இது தவிர திருவோணம், நவராத்திரி, மண்டல மகோற்சவம் (41 நாட்கள்), மகர சம்கிரம பூஜை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், ப்ததாம் உதயம் போன்ற விசேஷ நாட்களிலும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]