சார்லசு எல். பென்னட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்லசு எல். பெனனட்
Charles L. Bennett
சார்லசு இலியோனார்டு பென்னட்
பிறப்பு
நவம்பர் 16, 1956.
நியூ புரூன்சுவிக், நியூசெர்சி
ஆய்வு நிறுவனம் மேரிலாந்து பல்கலைக்கழகம் ( இளம் அறி, , 1978)
மசாச் சூசட்சு தொழில்நுட்ப நிறுவனம் (முனைவர், 1984)
அறிவியல் தொழில்
களங்கள் வானியற்பியல்
நிறுவனங்கள் கோடார்டு விண்வெளி பறப்பு மையம்
ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகம்
தேசிய வான், விண்வெளி ஆட்சியகம்
முனைவர் வழிகாட்டி பெர்னார்டு எப். பர்கு

சார்லஸ் எல். பென்னட்(Charles L. Bennett) (பிறப்பு:நவம்பர் 1956) ஒரு அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். அவர் புளூம்பெர்கு கட்டிலின் புகழ்பெற்ற பேராசிரியராகவும் , இயற்பியல், வானியல் முன்னாள் மாணவர் நூற்றாண்டுப் பேராசிரியராகவும் ஜான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் கில்மேன் அறிஞராகவும் உள்ளார்.[1] மேலும், இவர் நாசாவின் மிகவும் வெற்றிகரமான வில்கின்சன் நுண்ணகைச் சமச்சீரின்மை அமைப்பின் முதன்மை ஆய்வாளராக உள்ளார்.[1]

அவரது தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர் மேற்கோள் பின்வருமாறு கூறுகிறது. " வில்கின்சன் மைக்ரோவேவ் அனிசோட்ரோபி ஆய்வின் (டபிள்யூ. எம். ஏ. பி.) தலைவராக பென்னட் முன்னோடியில்லாத துல்லியத்துடனான அண்டத்தின் பல முதன்மை பண்புகளை அளவிட உதவியுள்ளார்.[2] உறுப்பினர் பதவி என்பது பொறியியலிலும் அறிவியலிலிலும் மிகவும் புகழ்பெற்ற அறிஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு பெரிய தகைமை ஆகும்.[3]

2005 ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் கல்விக்கழக என்றி டிரேப்பர் பதக்கமும் , 2009 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான காம்சுடாக் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டன.[4][5] " அண்ட அகவை அமைப்பு, அதன் வளைவின் துல்லியமான தீர்மானத்திற்காக " பென்னட் 2006 இல் ஆர்வி பரிசைப் பெற்றார்.[6] வானியலில் 2010 ஆம் ஆண்டின் சா பரிசை பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தின் இலைமான் ஏ. பேகு இளவல், டேவிடு என். சுப்பெர்கெல் ஆகியோருடன் இணைந்து அண்ட நுண்ணலைச் சமச்சீரின்மைக்கு அவர்கள் செய்த பணிக்காக பென்னட்டும் பகிர்ந்து கொண்டார்.[7] 2012 குரூபர் அண்டவியல் பரிசு சார்லசு எல். பென்னட் அண்ட நுண்ணலைச் சமச்சீரின்மைக் குழுவிற்கு வழங்கப்பட்டது. ஆரம்பகால அண்டத்தின் எச்சமாக விளங்கும் கதிர்வீச்சைக் கவனித்ததன் மூலம் சார்லசு எல். பென்னட்டும் அவர்து அண்ட நுண்ணலைச் சமச்சீரின்மைக் குழு செந்தர அண்டவியல் படிமத்தை நிறுவினர்.[8] பென்னட் 2013 ஆம் ஆண்டு கார்ல் ஜி. ஜான்சுகி பரிசு விரிவுரையாளராக பணி அமர்த்தப்ப்பட்டார்.[9]

2015 ஆம் ஆண்டில் பென்னட்டுக்கு கேதரினா தோமாசோனி, பெலிஸ் பியத்ரோ சிசேசி பரிசு வழங்கப்பட்டது " அண்டத்தைப் பற்றிய நமது பார்வையை உண்மையில் மாற்றிய அண்ட நுண்ணலைப் பின்னணி குறித்த இரண்டு செய்முறைகளில் முனைவர் பென்னட்டின் தலைமைக்கு, COBE - DMR, CMB , WMAP இல் உள்ள பண்டைய இடஞ்சார்ந்த அலைவுகளைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தது , இது அண்டவியல் அளவுருக்களின் துல்லியமான அளவீடுகளுக்கும் வழிவகுத்தது. உண்மையில் - செந்தர அண்டவியல் படிமத்தை நிறுவியது.[10] பென்னட் 2017 ஐசக் நியூட்டன் பதக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அப்பரிசுக்கான மேற்கோள், " வில்கின்சன் மைக்ரோவேவ் அனிசோட்ரோபி ப்ரோப் ( தலைவரான பேராசிரியர் சார்லசு எல் பென்னட் அண்டவியலையே ஒரு உருமாற்றும் விளைவை ஏற்படுத்தியுள்ளார். அண்ட நுண்ணலை பின்னணியில் வெப்பநிலை அலைவுகளின் நம்பமுடியாத துல்லியமான அளவீடுகள் அண்டத்தைப் பற்றிய நமது புரிதலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இது அண்டவியலை ஒரு அளவின் வரிசையில் இருந்து ஒரு துல்லியமான செய்முறை அறிவியலுக்கு மாற்றியது" என்று கூறுகிறது.[11] அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகம் தனது 2021 உரூம்போர்டு பரிசை முனைவர் பென்னட்டுக்கு அளிக்கையில்" அண்டவியல் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக " வழங்குவதாக,  அக்கழகத் தலைவரான டேவிடு ஒக்சுட்டோபி கூறினார். பேராசிரியர் பென்னட்டின் அற்புதமான பணி இயற்பியலின் அடிப்படை விதிகளின் தேடலால் அண்டவியலை ஒரு ஒருங்கிணைந்த புலமாக மாற்றியது. அவரது முன்னோடி படைப்புகள், அண்டத்தைப் பற்றிய முன்னோடியில்லாத துல்லியமான பார்வையை நமக்குத் தருகின்றன , மேலும் முதன்மையான அறிவியல் கண்டுபிடிப்பின் மகிழ்ச்சிகளையும் வாய்ப்புகளையும் நினைவூட்டுகின்றன.[12]

பென்னட் அமெரிக்க அறிவியல் முன்னேஎற்ரத்துக்கானகழகம்,அமெரிக்க இயற்பியல் கழகம் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக உள்ளார்.[1] 2002 ஆம் ஆண்டில் ஐ. எஸ். ஐ அமைப்பு அவரை உலகளவில் விண்வெளி அறிவியலில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆராய்ச்சியாளராக இனங்காட்டியது.[1] இவர் 2003 ஆண்டு முதல் வெளியிடப்பட்ட முதல் இரண்டு " மிகச் சூடான அறிவியல் உரைகள் " என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.[13] 2004 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14]

அண்ட நுண்ணலைச் சமச்சீரின்மைக் குழுவை( WMAP) வழிநடத்துவதற்கு முன்பு , பென்னட் வேறுபட்ட நுண்ணலைக் கதிரளவிகளுக்கான (DMR) துணை முதன்மை ஆய்வாளராகவும் இருந்தார். இது அண்டப் பின்னணித் தேட்ட (COBE) பணியில் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சின் சமச்சீரின்மையைக் கண்டுபிடித்தது. கதிரளவிக்கு முன் இறுதி நுண்ணலைக் கூறுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிக்கு பென்னட் தலைமை தாங்கினார் , இது வேறுபட்ட நுண்ணலைக் கதிரளவிக் கருவியின் உணர்திறனை கணிசமாக மேம்படுத்துவதில் வெற்றி பெற்றது. அண்ட நுண்ணலைப் பின்னணித் தேட்ட(COBE) அறிவியல் குழுவும் அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சின் கதிர்நிரலைத் துல்லியமாக அளவிட்டது.

2005 க்கு முன்னர் பென்னட் செய்முறை அண்டவியல் மூத்த அறிவியலாளரும் கோடார்டு மூத்த ஆய்வுறுப்பினரும் நாசா கோடார்டு விண்வெளிப் பறப்பு விண்கல மையத்தில் அகச்சிவப்பு வானியற்பியல் கிளைத் தலைவருமாக இருந்தார்.[1] பென்னட் 1976 முதல் 1978 வரை கோடைக்காலங்களில் கார்னகி நிறுவனத்தின் வாழ்சிங்டனின் நிலத்தரைக் காந்தவியல் துறையில் இருந்தார்.[1]

விருதுகள்[தொகு]

பென்னட் விருதுகள் பின்வருமாறு:[1]

  • 2021 உரூம்போர்டு பரிசு
  • 2018 அடிப்படை இயற்பியலுக்கான திருப்புமுனைப் பரிசு
  • 2017 ஐசக் நியூட்டன் பதக்கமும் பரிசும்: "வில்கின்சன் நுண்ணலை சமச்சீரின்மை ஆய்வின் (WMAP) தலைவரான பேராசிரியர் சார்லசு எல் பென்னட் அண்டவியலையே உருமாற்றும் விளைவை ஏர்படுத்தினார். Wmap, அண்ட நுண்ணலைப் பின்னணியின் வெப்பநிலை அலைவுகளின் நம்பமுடியாத துல்லியமான அளவீடுகள், அண்டத்தைப் பற்றிய நமது புரிதலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அண்டவியலை ஒரு வரிசை-அளவு விளையாட்டிலிருந்து துல்லியமான செய்முறை அறிவியலாக மாற்றியது."
  • 2015 கேதெரினா தோமாசோனி, பெலிசு பியத்ரோ சிசேசி பரிசு (டோமாசோனி விருதுகள்)
  • 2013, கார்ல் ஜி. ஜான்சுகி பரிசு விரிவுரையாளர்த் தகைமை
  • 2012 பென்னட் குழுவுக்கு குரூபர் அண்டவியல் பரிசு "பெருவெடிப்பில் இருந்தான எச்சக் கதிர்வீச்சில் உள்ள சமச்சீரின்மைகளின் நேர்த்தியான அளவீடுகளுக்காகவும் அண்ட நுண்ணலைப் பின்னணிக்காகவும்." வழங்கப்பட்டது இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் துல்லியமானவை. இக்குழுவின் அண்டப் படிமம் இப்போது பொதுவாக செந்தர அண்டவியல் படிமம் என்று அழைக்கப்படுகிறது."
  • 2010 வானியலில் சா பரிசு
  • 2009 தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின்இயற்பியலுக்கான காம்சுட்டாக் பரிசு
  • 2006 டெக்னியானின் ஆர்வி பரிசு
  • 2006 குரூபர் அண்டவியல் பரிசு (ஜான் மாதர், கோப் குழுவுக்கு "நமது அண்டம் ஒரு சூடான பெருவெடிப்பில் பிறந்தது என்பதை உறுதிப்படுத்தும் அற்புதமான ஆய்வுகளுக்காக வழங்கப்பட்டது.")[15]
  • 2005 தேசிய அறிவியல் கல்விக்கழக என்றி டிரேப்பர் பதக்கம்
  • 2005 தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினராகத் தேர்வு[16]
  • 2005 விண்வெளி சாதனைக்கான ரோட்டரி தேசிய விருது (வாழ்விடை விண்மீன் விருது)
  • 2004 நாசா WMAP க்கான விதிவிலக்கான அறிவியல் சாதனையாளர் விருது
  • 2004 அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கல்விக்கழக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2003 நாசா WMAP க்கான சிறந்த தலைமை விருது
  • 2003 விண்வெளி அறிவியலுக்கான ஜான் சி. இலிண்டு சே விருது
  • 2001 WMAP க்கான வான், விண்வெளி அறிவியல் " புதுமையில் விழுமியது" விருது
  • 1992 நாசாவின் COBE க்கானவிதிவிலக்கான அறிவியல் சாதனை பதக்கம்

கல்வி[தொகு]

மேரிலாந்து பல்கலைக்கழகப் பூங்காக் கல்லூரியில் இயற்பியலிலும் வானியலிலும் குறிப்பாக வானியலில் உயர் தகைமையுடன், பென்னட் ,தனது இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார் , இது மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் கணினி, கணிதம், இயற்கை அறிவியல் துறை சார்ந்த ஒரு புலமாகும்.[1]

1984 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து இயற்பியலில் முனைவர் பட்டம் பெர்றார். [1]

வெளியீடுகள்[தொகு]

கூகிள் ஸ்காலரில் 91,000 க்கும் மேற்பட்ட மேற்கோள்களும் எச் - சுட்டியில் 80 மேற்கோள்களும் பென்னட் பெற்றுள்ளார்.[17]

மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகள் (2000 க்கும் மேற்பட்ட மேற்கோள்கள்
  • 2009 with E Komatsu, J Dunkley, MR Nolta, B Gold, G Hinshaw, N Jarosik, D Larson, M Limon, L Page, DN Spergel, M Halpern, RS Hill, A Kogut, SS Meyer, GS Tucker, JL Weiland, E Wollack, EL Wright, Five-year wilkinson microwave anistropy probe* observations: cosmological interpretation, in The Astrophysical Journal Supplement Series. Vol. 180, nº 2; 330.
  • 2003 with DN Spergel, L Verde, HV Peiris, E Komatsu, MR Nolta, M Halpern, G Hinshaw, N Jarosik, A Kogut, M Limon, SS Meyer, L Page, GS Tucker, JL Weiland, E Wollack, EL Wright, First-year Wilkinson Anisotropy Probe (WMAP)* observations: determination of cosmological parameters, in The Astrophysical Journal Supplement Series. Vol. 148, nº 1; 175.
  • 2007 with DN Spergel, R Bean, O Doré, MR Nolta, Joanna Dunkley, G Hinshaw, N ea Jarosik, E Komatsu, L Page, HV Peiris, L Verde, M Halpern, RS Hill, A Kogut, M Limon, SS Meyer, N Odegard, GS Tucker, JL Weiland, E Wollack, EL Wright, Three-year Wilkinson Microwave Anisotropy Probe (WMAP) observations: implications for cosmology, in The Astrophysical Journal Supplement Series. Vol. 170, nº 2; 377.
  • 2003 with M Bay, M Halpern, G Hinshaw, C Jackson, N Jarosik, A Kogut, M Limon, SS Meyer, L Page, DN Spergel, GS Tucker, DT Wilkinson, E Wollack, EL Wright, The Microwave Anisotropy Probe* Mission, in The Astrophysical Journal. Vol. 583, nº 1; 1.
  • 2013 with G Hinshaw, D Larson, E Komatsu, DN Spergel, Joanna Dunkley, MR Nolta, M Halpern, RS Hill, N Odegard, L Page, KM Smith, JL Weiland, B Gold, N Jarosik, A Kogut, M Limon, SS Meyer, GS Tucker, E Wollack, EL Wright, Nine-year Microwave Anisotropy Probe (WMAP) observaitons: cosmological parameter results, in The Astrophysical Journal Supplement Series. Vol. 208, nº 2; 19.
  • 1992 with GF Smoot, A Kogut, EL Wright, J Aymon, NW Boggess, ES Cheng, G De Amici, S Gulkis, MG Hauser, G Hinshaw, PD Jackson, M Janssen, E Kaita, T Kelsall, P Keegstra, C Lineweaver, K Loewenstein, P Lubin, J Mather, SS Meyer, SH Moseley, T Murdock, L Rokke, RF Silverberg, L Tenorio, R Weiss, DT Wilkinson, Structure in the COBE differential microwave radiometer first-year maps, in The Astrophysical Journal. Vol. 396; L1-L5.
  • 2013 with D Larson, JL Weiland, N Jarosik, G Hinshaw, N Odegard, KM Smith, RS Hill, B Gold, M Halpern, E Komatsu, MR Nolta, L Page, David N Spergel, E Wollack, J Dunkley, A Kogut, M Limon, SS Meyer, GS Tucker, EL Wright, Nine-year Wilkinson Microwave Anisotropy Probe (WMAP) observations: final maps and results, in The Astrophysical Journal Supplement Series. Vol. 208, nº 2; 20.
  • 2009 with G Hinshaw, JL Weiland, RS Hill, N Odegard, D Larson, J Dunkley, B Gold, MR Greason, N Jarosik, Eiichiro Komatsu, MR Nolta, L Page, DN Spergel, E Wollack, M Halpern, A Kogut, M Limon, SS Meyer, GS Tucker, EL Wrigh, Five-year wilkinson microwave anisotropy probe* observations: data processing, sky maps, and basic results, in The Astrophysical Journal Supplement Series. Vol. 180, nº 2; 225.

நூல்தொகை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Brief Biography of Charles L. Bennett". Johns Hopkins University. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  2. "Charles L. Bennett, Johns Hopkins University". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  3. "National Academies members". National Academies. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  4. "Henry Draper Medal". National Academy of Sciences. Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  5. "Comstock Prize in Physics". National Academy of Sciences. Archived from the original on 29 December 2010. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  6. "Harvey Prize Winners". Technion – Israel Institute of Technology. Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  7. "Announcement and Citation - Astronomy - 2010". Shaw Prize. Archived from the original on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2011.
  8. "2012 Gruber Cosmology Prize Press Release". The Gruber Foundation. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  9. "Jansky Prize". National Radio Astronomy Observatory. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  10. "Tommasoni Prizes". பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  11. "2017 Isaac Newton Medal and Prize". Institute of Physics awards > International Medal. Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 26 November 2017.
  12. "Pioneering Astrophysicist Charles L. Bennett Receives Rumford Prize". American Academy of Arts & Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
  13. "Super Hot Papers in Science Published Since 2003". The Thomson Corporation. Archived from the original on 17 October 2015. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  14. "Book of Members, 1780–2010: Chapter B" (PDF). American Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் June 15, 2011.
  15. "NASA and COBE Scientists Win Top Cosmology Prize". NASA. பார்க்கப்பட்ட நாள் 28 July 2015.
  16. "Charles Bennett". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
  17. "Charles L. Bennett". scholar.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_எல்._பென்னட்&oldid=3775428" இலிருந்து மீள்விக்கப்பட்டது