சார்மைன் சாலமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சார்மைன் சாலமன்
Charmaine Solomon
தொழில் பத்ஹ்டிரிகையாளர், வணிக முதலாளி
நாட்டுரிமை ஆத்திரேலியர்
இலக்கிய வகை சமையல் புத்தகங்கள்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
முழுமையான ஆசிய சமையல் '
துணைவர்(கள்) உரூபன் சாலமன்
பிள்ளைகள் நைனா ஆரிசு, தெபோரா சாலமன், காரி சாலமன், ஆண்ட்ரு சாலமன்

சார்மைன் மௌரீன் சாலமன் (Charmaine Maureen Solomon) [1] இலங்கை - ஆத்திரேலிய சமையல் கலை வல்லுநராவார். 31 சமையல் புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். [2] மசாலா கலவைகள் மற்றும் இறைச்சிகளின் சொந்த வணிகப் பெயரை உருவாக்கியுள்ளார். [3] சிட்னி மார்னிங் எரால்டு பத்திரிகையும் பெரும்பாலான பொதுமக்களும் இவரை "ஆத்திரேலியாவில் ஆசிய சமையல் ராணி" என்று அழைக்கின்றனர். [4] மற்றும் "சமையல் புத்தக ஆசிரியர்களில் புனித மும்மூர்த்திகளில் ஒருவர் . என்றும் குறிப்பிடுகின்றனர். ஆத்திரேலியாவில் உள்ள பிரபலங்களை அடையாளப்படுத்தும் பட்டியலில் இவர் பெயரையும் சேர்த்துள்ளனர். மேலும் ஆத்திரேலிய வீடுகளுக்கு ஆசிய உணவை அறிமுகப்படுத்துபவர் சார்மைன் என்று பல்வேறு வர்ணனையாளர்களாலும் இவர் பாராட்டப்படுகிறார். [5] இவரது 1976 சமையல் புத்தகம், முழுமையான ஆசிய சமையல் புத்தகம் ஆகும். ஐந்து மொழிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டது. [6] ஆத்திரேலியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க சமையல் புத்தகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

பின்னணி[தொகு]

சார்மைன் இலங்கையின் கொழும்பு, நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சார்மைன் மௌரீன் பௌலியர் என்பதாகும். இலங்கையின் குடியேறிய பரங்கியர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் இவருடைய பெற்றோர்கள் ஆவர். இவரது தாயார் முதலில் பர்மாவைச் சேர்ந்தவர் . [7] 18 வயதில் இவர் சிலோன் டெய்லி நியூசு என்ற ஆங்கிலப் பத்திரிகையின் பெண்கள் பக்கங்களின் ஆசிரியருக்கு உதவியாளரானார். அரச குடும்பத்தினர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக அறிஞர்கள் போன்ற முக்கிய பிரபல்ங்களை இவர் பேட்டி கண்டார். 1956 ஆம் ஆண்டில் ரங்கூனில் பிறந்த இசைக்கலைஞர் உரூபன் கெல்லி சாலமனை இவர் திருமணம் செய்து கொண்டார். தம்பதியர்களுக்கு 1959 ஆம் ஆண்டு ஆத்திரேலியா செல்வதற்கு முன்பு இரண்டு மகள்கள் இருந்தனர். அதற்குப் பின்னர் அவர்களுக்கு மேலும் இரண்டு மகன்கள் பிறந்தனர். [5]

தொழில்[தொகு]

இரவுகளில் வேலை செய்யும் போது, அறிமுகமில்லாத இடத்தில் இருப்பதற்கான தனது பயத்தை அமைதிப்படுத்த சார்மைன் சாலமன் சமைக்க கற்றுக்கொண்டார். கணவர் உரூபன் இரவு நேரங்களில் இசைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். 1964 ஆம் ஆண்டில், மகளிர் தினம் என்ற பத்திரிகை நடத்திய சமையல் போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் சமையல் புத்தக எழுத்தாளர் மார்கரெட் டு புல்டனின் கவனத்தை ஈர்த்தார். சமையல் கலை எழுத்தாளராக மகளிர் தினம் பத்திரிகைக்கு வருமாறு இவருக்கு அழைப்பு விடுத்தார். [8] இப்பத்திரிகையில் சாலமன் 11 ஆண்டுகள் பணியாற்றினார். அதில் மூன்று உணவுகளுக்கு இவர் சமையல் ஆசிரியராக இருந்தார். பின்னர் பெல்லி பத்திரிகையின் சமையல் ஆசிரியரானார். தி சன்-எரால்டு மற்றும் தி சிட்னி மார்னிங் எரால்டு பத்திரிகைகளில் வழக்கமான கட்டுரையாளராகத் தொடர்ந்தார். மற்றும் மூன்று வருடங்கள் குடும்ப வட்ட இதழின் உணவு ஆசிரியராகவும் இருந்தார். [9] இவரது முதல் புத்தகம், தென்கிழக்கு ஆசிய சமையல் புத்தகம், 1972 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. முழுமையான ஆசிய சமையல் புத்தகம் 1976 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அடுத்த மூன்று பத்தாண்டுகளில் இவர் மேலும் 29 புத்தகங்களை எழுதினார்.

கவுரவங்கள் மற்றும் விருதுகள்[தொகு]

சாலமன் உணவு ஊடக சேவைக்காக, குறிப்பாக ஆசிய சமையல் புத்தகங்களின் ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டு 2007 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் ஆர்டர் ஆஃப் மெடல் பரிசை வென்றார். [6] [10] ஆசிய உணவின் கலைக்களஞ்சியம் என்ற புத்தகம் 1996 ஆம் ஆண்டு வெள்ளிப்பதக்கம் வென்றது. சூலியா குழந்தைகள் சமையல் புத்தக விருதுகளில் வெள்ளிப் பதக்கத்தையும், 1997 உலக உணவு ஊடக சிறந்த உணவு புத்தக விருதுகளில் வெள்ளி அகப்பையையும் வென்றது. [6] கணவர் உரூபனுடன் இவர் உருவாக்கிய மசாலா கலவைகள் 1998 ஆம் ஆண்டில் இயாக்குவார் பரிசு பெற்றன.[11] மேலும் 2002 ஆம் ஆண்டில் கோர்மண்ட் உலக சமையல் புத்தக விருதுகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முழுமையான இவருடைய சைவ சமையல் புத்தகம் சிறந்த சைவ புத்தக விருதை வென்றது. [12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Asian food / Charmaine Solomon with Nina Solomon | National Library of Australia". Catalogue.nla.gov.au.
 2. "Charmaine Solomon". The Food Show. மூல முகவரியிலிருந்து 26 April 2012 அன்று பரணிடப்பட்டது.
 3. "Home". Charmaine Solomon.
 4. https://www.cooked.com.au/Charmaine-Solomon
 5. 5.0 5.1 "Interview with Charmaine Solomon". Australian Broadcasting Corporation.
 6. 6.0 6.1 6.2 "Archived copy". மூல முகவரியிலிருந்து 2012-02-27 அன்று பரணிடப்பட்டது. (PDF). Archived from the original (PDF) on 27 February 2012. Retrieved 23 December 2011.CS1 maint: archived copy as title (link)
 7. Jane Fraser talks with Charmains Solomon, The Weekend Australian, 17–18 March 2001, Review, p. 3
 8. Charmaine Solomon (Author) About. "Charmaine Solomon | Penguin Books Australia". Penguin.com.au. மூல முகவரியிலிருந்து 1 September 2011 அன்று பரணிடப்பட்டது.
 9. "Charmaine Solomon / claxton speakers / speaker profile". Claxtonspeakers.com.au.
 10. It's an Honour
 11. "Archived copy". மூல முகவரியிலிருந்து 4 March 2012 அன்று பரணிடப்பட்டது.
 12. Charmaine Solomon (24 March 2010). "Charmaine Solomon from HarperCollins Publishers Australia". Harpercollins.com.au. மூல முகவரியிலிருந்து 29 November 2011 அன்று பரணிடப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்மைன்_சாலமன்&oldid=3286944" இருந்து மீள்விக்கப்பட்டது