சாம் பக்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் பக்ரி
Sam Bugri
தனிநபர் தகவல்
தேசியம்கானா நாட்டினர்
பிறப்பு2 ஏப்ரல் 1943 (1943-04-02) (அகவை 81)
பாகு, மேற்கிழக்குப் பகுதி, கானா
இறப்பு10 மார்ச்சு 2024[1]
விளையாட்டு
விளையாட்டுகுறு விரைவோட்ட வீரர்
நிகழ்வு(கள்)400 மீட்டர்

டாக்டர் சாமுவேல் ஜான்யா பக்ரி (Sam Bugri, 2 ஏப்ரல் 1943 – 10 மார்ச்சு 2024) சாம் பக்ரி என்றும் அழைக்கப்படுபவர் கானாவின் குறு விரைவோட்ட வீரரும், பொதுச் சுகாதார அதிகாரியுமாவார். குறு விரைவோட்ட வீரராக, இவர் 1968 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் 1972 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் 400 மீட்டரில் போட்டியிட்டார்.[2] ஒரு சுகாதார நிபுணராக, கானாவின் கினியா புழு ஒழிப்புத் திட்டத்தின் முதல் ஒருங்கிணைப்பாளர் உட்பட பல திட்டங்களிலும் அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவர் கார்ட்டர் மையம், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), போன்ற பன்னாட்டு அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. WHO Collaborating Center for Dracunculiasis Eradication, CDC (2024-03-26). "DR. SAM Z. BUGRI (1943-2023), EARLY GUINEA WORM WARRIOR". GUINEA WORM WRAP-UP #307 (PDF) (Report). pp. 8–9.
  2. "Sam Bugri Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_பக்ரி&oldid=3960137" இலிருந்து மீள்விக்கப்பட்டது