சாம்சூன் மாகாணம்
சாம்சூன் மாகாணம் Samsun ili | |
---|---|
துருக்கியின் மாகாணம் | |
வார்ப்புரு:Samsun imagemap Clickable imagemap | |
![]() துருக்கியில் சாம்சூன் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மேற்கு கருங்கடல் |
துணைப்பகுதி | சாம்சூன் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | மூஸ் |
• ஆளுநர் | சுல்கிஃப் டாஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,579 km2 (3,698 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 13,35,716 |
• அடர்த்தி | 140/km2 (360/sq mi) |
தொலைபேசி குறியீடு | 0362 |
வாகனப் பதிவு | 55 |
சாம்சூன் மாகாணம் (Samsun Province, துருக்கியம்: Samsun ili ) 1,252,693 (2010) என்பது கருங்கடல் கடற்கரையில் உள்ள ஒரு துருக்கி மாகாணமாகும் . இது 1,252,693 (2010) மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதன் அருகில் உள்ள மாகாணங்களாக வடமேற்கில் சினோப், மேற்கில் கோரம், தெற்கில் அமஸ்யா, கிழக்கில், தென்கிழக்கில் டோகாட் ஆகியவை உள்ளன. இதன் போக்குவரத்துக் குறியீடு 55 ஆகும்.
மாகாண தலைநகராக சம்சூங் நகரம் உள்ளது. இது துருக்கியின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாகும்.
நிலவியல்[தொகு]
ஏரிகள்[தொகு]
மாகாணத்தில் லடிக் ஏரி, அகல், டுமன்லே ஏரி, செமென்லிக் ஏரி போன்ற ஏரிகள் உள்ளன.
ஆறுகள்[தொகு]
மகாணத்தில் கோசலர்மக், யெசிலர்மக், டெர்ம் நதி, அப்டல் சுயு, மெர்ட் இர்மா, கோர்டான் சுயு போன்ற ஆறுகள் பாய்கின்றன. [2]
மாவட்டங்கள்[தொகு]
சம்சுங் மாகாணமானது 17 மாவட்டங்களக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு சாம்சூன் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன (தடித்த எழுத்துக்களில் சுட்டபட்டுள்ளது).
- அல்கடம்
- கனிக்
- அட்டகம்
- டெக்கேகாய்
- அலசம்
- அசர்காக்
- அய்வாசக்
- பாஃப்ரா
- கார்சம்பா
- ஹவ்ஸா
- காவக்
- லடிக்
- ஒன்டோகுஸ்மாயஸ்
- சலபசரா
- டெர்ம்
- விசிர்கோப்ரு
- யாககென்ட்
வரலாறு[தொகு]
மாகாணத்தில் அறுவைசிகிச்சை கருவிகள் தயாரிக்கப்படுகின்றன, அவை 4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன. [3] துருக்கிய குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமல் அடாடர்க், துருக்கிய சுதந்திரப் போரை 1919 மே 19 அன்று இங்குதான் தொடங்கினார்.
குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் சாம்சூன் மாகாணம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.