சாமுவேல் கிராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாமுவேல் கிராசு (Samuel Krauss) (அங்கேரி, 18 பிப்ரவரி 1866 - கேம்பிரிட்ச், 4 சூன் 1948) 1894 ஆம் ஆண்டு முதல் 1906 ஆம் ஆண்டு வரை புடாபெசுட்டு நகரில் உள்ள யூத ஆசிரியர்களின் குருத்துவக் கல்லூரி மற்றும் 1806 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை வியன்னாவில் உள்ள யூத இறையியல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இவர் அகதியாக இங்கிலாந்து சென்றுகேம்பிரிட்சில் தனது கடைசி ஆண்டுகளை கழித்தார்.

இவர் யூத கலைக்களஞ்சியத்தில் பங்களிப்பாளர் ஆனார்.[1]

"பேராசிரியர் க்ராசின் புலமைப்பரிசில் பண்டைய யூத மதத்தின் ஒவ்வொரு பகுதியையும் உள்ளடக்கியது."[2] 1910 இல் இவர் வெளியிட்ட தல்மூத் தொல்லியல் குறித்த நூல் (Talmudische Archäologie) மூலம் தல்மூத் தொல்லியலின் முன்னோடியானார். அந்நூல் 1924 ஆம் ஆண்டு மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டது.[3] 1922 ஆம் ஆண்டு இவர் ஆய்வு செய்து எழுதிய பண்டைய யூத தொழுகைக் கூடம் குறித்த நூலானது (சினகோகேல் ஆல்டர்டுமர்) 1998 ஆம் ஆண்டுவரை யூத தொழுகைக்கூடம் குறித்த ஆய்வுகளுக்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது.[2]

1935 ஆம் ஆண்டு அப்போதைய தொண்ணூற்றெட்டு நவீனநாடுகளின் விவிலியப் பெயர்களைப் பற்றிய விரிவான ஆய்வை வெளியிட்டார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "S. Kr. Samuel Krauss, Ph.D., Professor, Normal College, Budapest, Hungary". JewishEncyclopedia.com. பார்க்கப்பட்ட நாள் 2007-03-01.
  2. 2.0 2.1 Fine, Steven (1999). Jews, Christians and Polytheists in the Ancient Synagogue. Routledge (UK). பக். xv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-18247-6. 
  3. Daniel Sperber (1998). The City in Roman Palestine. Oxford University Press. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-509882-X. https://archive.org/details/cityromanpalesti00sper. 
  4. Rosenthal, Judah M. (October 1957). "Minni: Allemania?". The Jewish Quarterly Review. New Series (The Jewish Quarterly Review, Vol. 48, No. 2) 48 (2, Dropsie College Jubilee Alumni Issue): 204–20. doi:10.2307/1452710. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_கிராசு&oldid=3857232" இலிருந்து மீள்விக்கப்பட்டது